ஸ்டாலினுக்கு தற்போதும் தன் குடும்பத்தின் மீது தான் அக்கறை - பழனிசாமி தாக்குதல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கியதே நாங்கள் தான் தெரிவித்துள்ளார்.

First Published Sep 29, 2022, 8:04 PM IST | Last Updated Dec 9, 2024, 5:28 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்று நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினர், ஆனால் தற்போது அக்கட்சி அமைச்சர்களே பெண்களை பார்த்து ஓசி பயணம் என்று ஏளனமாகப் பேசுகின்றனர். இதற்கெல்லாம் தேர்தல் காலத்தில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.