'ஆம்பள' படத்தை தொடர்ந்து  இயக்குனர் சுந்தர்.சி மீண்டும் விஷாலை வைத்து இயக்கி வரும் திரைப்படம், 'ஆக்ஷன்'. அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இயக்கி முடித்துள்ளார் சுந்தர்.சி.

இந்த படத்தில், விஷாலுக்கு இணையான அதிரடி கதாப்பாத்திரத்தில் நடிகை தமன்னா  நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, அனிகா பூரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில் இரண்டு வெற்றி படங்களை கொடுத்த பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் இருக்கும் டீஸர் வெளியாகியுள்ளது. ஸ்டார்டிங் டூ எண்டிங் வரை சண்டை காட்சிகள் இந்த டீசரில் இடப்பெற்றுள்ளது. நடிகை தமன்னா ஒரு காட்சியில் பச்சை நிற பிகினி உடையில் தோன்றும் காட்சி வேற லெவல். அதே போல் ஐஸ்வர்யா லட்சுமியுடன் விஷால் நடனமாடும் ஒரு காட்சியும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்த படத்தின் டீசர் இதோ...