Karthigai Deepam 2 Serial Today Episode : விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் சீரியலில்... கார்த்திக் காளியம்மா சதியை முறியடித்தாரா? இல்லையா என்பது பற்றி பார்ப்போம்.
கார்த்திகை தீபம் 2
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம் 2. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரமேஸ்வரி பாட்டி அந்த நபர்கள் கோவிலுக்குள் இருப்பதாக தகவல் கொடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
அதாவது, காளியம்மாவால் கோவிலுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் நபர்களை பிடித்து பஞ்சாயத்தில் ஒப்படைத்து, காளியம்மா, சிவனாண்டி போட்ட திட்டத்தை அடியோடு முறியடிக்கிறான். இதை தொடர்ந்து ஊர் காரர்கள் சிவனாண்டி மீது கம்பளைண்ட் கொடுக்க சொல்ல, சாமுண்டீஸ்வரி இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி செல்கிறாள்.
வீட்டிற்கு வந்த சிவனாண்டியும் , காளியம்மாவும் நல்ல வாய்ப்பு கிடைத்தும், இப்படி நாசமாக போய்டுச்சு என்று வயித்தெரிச்சல் படுகிறார்கள். மேலும் அடுத்ததாக கார்த்தியை சிக்க வைப்பது தான் சரியாக இருக்கும் என்றும், கார்த்திக் ராஜசேதுபதியின் உண்மையான பேரன் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இறங்க முடிவெடுக்கிறார்கள்.
பின்னர் வீட்டிற்கு வரும் கார்த்தியை, சந்திரகலா நிற்க வைத்து உனக்கும் பாட்டிக்கும் என்ன சம்மந்தம், எல்லா முறையும் அவங்க எப்படி உனக்கு உதவுறாங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள், கார்த்திக்கோ பாட்டி இந்த குடும்பத்துக்கு நல்லது தான் நினைக்குறாங்க என்று சப்போர்ட் செய்து பேசுகிறான்.
இதனால் சாமுண்டீஸ்வரிக்கு கார்த்திக் மீது சந்தேகம் எழுகிறது. கார்த்திக் உண்மையிலேயே ராஜசேதுபதியின் பேரனா என்பதை கண்டுபிடிக்க ஓரு டிடெக்டிவ்வை ஏற்பாடு செய்து, கார்த்தியை நோட்டமிட சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
ராஷ்மிகா மந்தனாவின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதானா? என்ன சாப்பிடுகிறார்?
