விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று 'ராஜா ராணி'. இந்த சீரியலில் கார்த்தி - செம்பா என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவ்  மற்றும் ஆலியா மானசா இருவரும் உண்மையிலேயே காதலித்து வருகிறார்கள்.

சஞ்சீவ்வை காதலிப்பதால், ஏற்கனவே காதலித்து வந்த நபரை பிரேக் அப் செய்தார் ஆலியா. 

இவர்கள் இருவரும், தற்போது ஒன்றாக சீரியல் நடிப்பது மட்டும் இன்றி, விளம்பர படங்கள் மற்றும் குறும்படம் ஆகிய வற்றிலும் இணைந்து நடித்து வருகிறார்கள். மேலும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மிக பிரமாண்டமாக விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இருவரும் பிரபலங்கள் அனைவர் மத்தியிலும் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார்.

ஆனால் இதுவரை இதனை அவர்கள் இருவருமே வெளியே கூறவில்லை. இதற்கு காரணம் விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த  விருது நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் இருக்கவேண்டும் என ரகசியமாக வைத்துள்ளார்கள்.இவர்களுடைய திருமண தேதியும் அறிவிக்க அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.