Anna Serial Today Episode Update : அண்ணா சீரியலில் சண்முகத்தில் நண்பரான உடன்குடியை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வர அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.
Anna Serial Today Episode Update : ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியலில் அண்ணா சீரியலும் ஒன்று. இந்த சீரியல் இப்போது சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. அதாவது, நேற்றைய எபிசோடில் எபிசோடில் சிவபாலன் சௌந்தரபாண்டியிடம் நீங்க சொல்றது தான் கேட்பேன் என்று சொல்லிய நிலையில் இன்று என்ன நடந்தது என்பது குறித்து பார்க்கலாம். சிவபாலன் மற்றும் வீராவை இருவரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் வைஜெயந்தி இதனை பார்த்து விட்டு உடனே சௌந்தரபாண்டியனுக்கு போன் போட்டு கேட்கிறார். ஆனால், இதை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று சௌந்தரபாண்டியன் கூறிவிட்டார்.
இதையடுத்து வெங்கடேஷை தேடிக் கொண்டிருக்கும் குரு வழியில் உடன்குடியை மடக்கி பிடிக்க மெடிக்கல் ஷாப்பில் காட்டன் வாங்கியது பற்றி விசாரிக்க, அவரும் அதனை ஒப்புக் கொண்டார். மேலும், பரணியின் ஹாஸ்பிடலில் தான் கொடுத்தேன் என்று உண்மையை சொன்னார். உடனே உடன்குடியை அழைத்துக் கொண்டு பரணியின் மருத்துவ மனைவிக்கு வந்த குரு அங்கு வெங்கடேஷை தேடிப் பார்க்க வெங்கடேஷ் இல்லை. இதனால் ஏமாற்றத்துடன் குரு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
வெங்கடேஷ் அறிவழகன் வீட்டில் இருப்பது குருவிற்கு தெரியாது. அவரை ஒருபுறம் போலீசார் தேடிக் கொண்டிருந்தனர். இறுதியாக சண்முகம் அனைவருக்காகவும் பிரியாணி வாங்கிக் கொண்டு வர இங்கு யாருக்கும் பிரியாணி சாப்பிட விருப்பம் இல்லை என்று கூறினர். பின்னர் பிரியாணி பார்க்க அனைவருக்கும் ஆசை வர அனைவருமே பிரியாணியை சாப்பிட்டு ரசித்தனர். அதோடு இன்றைய சீரியல் முடிந்தது. இனி நாளைக்கு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
