விஜய் டிவி தொலைக்காட்சி, ரசிகர்களை கவர பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு, சீரியல்களுக்கும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் மிக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

அந்த வகையில், 500 எபிசோடுகளுக்கு மேல் கடந்து, ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது 'ராஜா ராணி' சீரியல். 

இந்த சீரியலில் ஆலியா மனசா கதாநாயகியாகவும், சஞ்சீவ் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்கள். இதுவரை ரீல் ஜோடியாக நடித்து கொண்டிருந்தவர்கள், ரியல் ஜோடியாகவும் கூடிய விரைவில் மாறவுள்ளனர். 

காதல் ஜோடிகளால் சுற்றி திருந்த இவர்கள், சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதனை விஜய் டிவி ப்ரோமோ மூலம் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, சென்னையில் எடுக்கப்பட்டு வந்த இந்த சீரியலை சில நாள், சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர் குழுவினர். இதற்காக தற்போது இந்த சீரியல் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிங்கப்பூர் செல்ல உள்ளதை, ஆலியா விமான நிலையத்தில் இருந்து வீடியோ வெளியிட்டு கூறியுள்ளார்.

அந்த வீடியோ இதோ:

 


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gud Mrng amigos ..#RAJARANI shooting @ Singapore

A post shared by Alya Manasa (@alya_manasa) on Apr 24, 2019 at 3:39pm PDT