கார்த்திகை தீபம் 2 சீரியலில் அம்மன் மீது பக்தி கொண்ட மாரிக்கு, ரேவதி தொடர்பாக ஏதோ உள்ளுணர்வு தோன்றவே, அவரை காப்பாற்ற வேண்டும் என்று கார்த்திக்கிடம் சொல்கிறார். அதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் 2
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் 2 சீரியலில் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கும் ரேவதிக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று மாரி கூறுகிறார். அதைப் பற்றி முழுவதுமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம். ரோகிணி ஃப்ரண்ட் தான் மாரி. அவர் தான் இப்போது ரேவதிக்கு இரத்தம் கொடுக்க வந்து கொண்டிருக்கிறார்.
ரேவதி உயிருடன் இருப்பது சந்திரகலா மூலமாக மாயாவிற்கு தெரிய வருகிறது. நான் மட்டும் என்னுடைய மகேஷை பிரிந்திருக்கும் சூழல் நீ மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறி ரேவதியை துப்பாக்கியால் சுட்டு தள்ளியவர் தான் மாயா. இப்போது அவர் உயிருடன் இருப்பது தெரிந்து மாறுவேடத்தில் மருத்துவனைக்கு வந்துள்ளார். அங்கு ரேவதி அறைக்கு சென்ற மாயா, அவரை கழுத்தை நெறித்து கொல்ல முயற்சித்துள்ளார்.
Anna Serial: வைஜெயந்திக்கு ஆப்பு ; சாட்சி சொல்ல வந்த முருகன் சிலை - அண்ணா சீரியல் அப்டேட்!
இது தொடர்பாக அம்மனின் தீவிர பக்தையாக இருக்கும் மாரிக்கு தெரிய வருகிறது. இதைப் பற்றி உங்களது மனைவி உயிருக்கு ஆபத்து என்று மட்டும் கார்த்திக்கிடம் கூறுகிறார். அதற்கு கார்த்தி என்ன செய்கிறார் என்ற கேள்வி எழும் நிலையில் அந்த நேரம் பார்த்து சாமுண்டீஸ்வரி வருகை தருகிறார். இதைத் தொடர்ந்து அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
War 2 OTT Release : தியேட்டரில் சொதப்பிய வார் 2, ஓடிடியில் ஹிட் அடிக்குமா?
