விஜய் டிவியில் கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை. 

இதில் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர்கள், தொகுப்பாளர்கள்,  தங்களின் ரியல்  ஜோடிகளுடன் கலந்து கொண்டு, நிகழ்ச்சியாளர்கள் கொடுக்கும் டாஸ்கை வெற்றிகரமாக செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை விடாமல் பார்க்கும் ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.

பிரபலமான தொகுப்பாளினி மணிமேகலை அவருடைய கணவர் உசேன், சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான சங்கரபாண்டியன் மற்றும் அவருடைய மனைவி ஜெயபாரதி, காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நிஷா அவருடைய கணவர், சூப்பர் சிங்கர் பிரபலம் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் இறுதி சுற்றில் இடம்பிடித்துள்ளனர்.

ஏற்கனவே சில ஜோடிகள் இந்த நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்ட  நிலையில் தற்போது இறுதிச்சுற்றில் தேர்வான ஜோடிகளில் பட்டத்தை தட்டி சென்ற ஜோடி, குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான சங்கரபாண்டியன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் நிகழ்ச்சி பட்டத்தை வென்றுள்ளனர். பைனல் நிகழ்ச்சி நாளை மாலை 3மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.