Chandrakala Kidnapped Naveen : கார்த்திகை தீபம் 2 சீரியலில் நவீனை போலீசிடம் பிடித்துக் கொடுக்க சந்திரகலா போராடும் நிலையில் கார்த்திக் எப்படி காற்றுகிறார் என்பது பற்றி பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2 சீரியல் நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோசில் துர்காவிற்கு முகூர்த்த புடவை எடுக்க குடும்பத்தினர் அனைவரு ஷாப்பிங் சென்றனர். ஆனால், துர்காவின் திருமணம் நடக்க நவீனை போலிசிடம் பிடித்துக் கொடுக்க சந்திரகலா திட்டமிட்டு வருகிறார். இதற்காக அவர ஒரு நாடகமாடி போலிசிலும் புகார் கொடுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் நவீனை ஒரு பக்கம் தேட, சந்திரகலாவும் ஒரு பக்கம் தேடி வந்தார்.

இந்த நிலையில் தான் கார்த்திக் தனது வீட்டிலேயே நவீனை மறைத்து வைத்தார். இது தெரிந்த துர்கா, நவீனை துணிக்கடைக்கு வரச் சொல்ல அவரும் மாறுவேடத்தில் துணிக்கடைக்கு வந்துள்ளார். இது குறித்து தெரிந்து கொண்ட சந்திரகலா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசும் துணிக்கடைக்கு வந்துவிட்டனர். அப்போது ஒன்றும் புரியாமல் திகைத்த கார்த்திக்கிற்கு துர்கா ஷாக் கொடுக்கும் வகையில் நான் தான் நவீனை இங்கு வர சொன்னேன். அவரும் இங்கு தான் இருக்கிறார். நீங்கள் தான் அவரை காப்பாற்ற வேண்டும் என்று துர்கா கூறுகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் நவீனையும் திட்டி தீர்த்தார். இதைத் தொடர்ந்து நவீனை கார்த்திக் அட்ட பாக்ஸில் மறைத்து வைக்கிறார். பின்னர் அந்த அட்ட பாக்சை போலீசார் பரிசோதிக்கின்றனர். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் கார்த்திக் மறைத்து வைத்திருந்த அட்ட பாக்ஸை அப்படியே எடுத்து மாற்றி வைத்து நவீனை சந்திரகலா ஆள் வைத்து கடத்துகிறார். அப்போது போலீசார் அந்த வண்டியை மறித்து பரிசோதனை செய்த போதும் அவர்களால் நவீனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனை தொடர்ந்து கார்த்திக் கடத்தப்பட்ட நவீனை காப்பாற்றுகிறார், மறுபக்கம் சிவனாண்டியும் சந்திரகலாவும் எப்படியாவது இந்த நவீனை மாட்டி விட வேண்டும் என திட்டமிடுகின்றனர். அடுத்து நவீனை துர்காவின் ரூமில் தங்க வைக்கிறார் கார்த்திக். அப்போது அப்பா அம்மாவாக நடிக்க வந்த கும்பல் சாமுண்டீஸ்வரியின் அறையில் நகையை திருட வந்தது பற்றி கூறுகிறார். இதையடுத்து நவீன் துர்காவின் அறையில் இருப்பது தெரிந்து அவரை சிக்க வைக்கிறார் சந்திரகலா. போலியாக நடிக்க வந்த அப்பா மற்றும் அம்மாவை கார்த்திக் கையும் களவுமாக பிடிக்கிறார். இந்த சூழலில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.