Asianet News TamilAsianet News Tamil

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து கவினுக்கு பளார் விட்டவர்.. இப்போ அவரும் உள்ள வராரு - யார் இந்த பிரதீப் ஆண்டனி!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்று கிழமை கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் ஒருவர் பின் ஒருவராக களம் இறங்கி வருகின்றனர்.

Bigg Boss Tamil Season 7 Famous tamil movie actor pradeep antony entered the house ans
Author
First Published Oct 1, 2023, 7:56 PM IST | Last Updated Oct 1, 2023, 7:56 PM IST

இதுவரை 6 சீசன்களாக நடந்து முடிந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது தனது ஏழாவது சீசனில் கால் பதித்துள்ளது. உலகநாயகன் தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை இரண்டு வீடுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த முறை 18 போட்டியாளர்கள் களமிறங்க உள்ளதும் அனைவரும் அறிந்ததே. அதன்படி ஏற்கனவே நடிகர் கூல் சுரேஷ் மற்றும் நடிகைகள் பூர்ணிமா ரவி மற்றும் ரவீனா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள நிலையில், அடுத்தபடியாக பிரபல நடிகர் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

பிக் பாஸ் ஜாக்கிரதையா இருங்க - கன்டென்ட் கொடுக்கவே "அவதாரம்" எடுத்தவர் பராக் - யார் இந்த கூல் சுரேஷ்?

யார் இந்த பிரதீப் ஆண்டனி?

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகர் கவின் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது, அவரை பார்க்க அவரது வீட்டிலிருந்து யாரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வராத நிலையில், அவர் சார்பாக அவரது நண்பர் ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார். 

அப்பொழுது அனைவருக்கும் மத்தியில் நடிகர் கவின் அவர்களை பளார் என்று அறைந்து, தனது நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தினார் ஒருவர். அவர்தான் கவின் அவர்களின் நண்பரும், பிரபல நடிகருமான பிரதீப் ஆண்டனி. 

இந்நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் தற்பொழுது ஆண்டனி அவர்கள் ஒரு போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். இறுதியாக வெளியான கவின் அவருடைய டாடா திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பல தமிழ் திரைப்படங்களில் அவர் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார். இவரும் வலுவான ஒரு போட்டியாளராகவே கருதப்படுகிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஆராத்தி.. இனி Entertainmentக்கு பஞ்சமே இல்ல - யார் இந்த பூர்ணிமா ரவி?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios