ரசிகர்கள் மட்டும் அல்ல பல பிரபலங்களும் மிக பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 3.  விரைவில் ஆரம்பமாக உள்ளதை உறுதி செய்யும் விதத்தில் ஏற்கனவே இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகியது.

இதை தொடந்து புதிய ப்ரோமோ ஒன்றை, பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் ஆரம்பத்தில் ஒருவர்,  மிகவும் களைப்பாக வந்து சோபாவில் அமருகிறார். அவரின் அருகே உள்ள தொலைக்காட்சியில் அவர் முகம் ஜோக்கர் போல் தெரிகிறது. அவர் அதனை உற்று பார்க்கிறார். இதை தொடர்ந்து, ஓட்டல் ஊழியர் ஒருவன் கடை காட்டப்படுகிறது, அவருடைய கண்களில் கண்ணாடி போட்ட வாறு, டிவியில் தெரிகிறது. இதை தொடர்ந்து சீட்டாடும் கும்பல் ஒன்று காட்டப்படுகிறது. இதில் ஒருவர் மற்றொருவரை அடிக்க கை ஓங்குகிறார், அவருடைய முகத்தில் கொம்பு வைத்தது போல் டிவியில் காட்டப்படுகிறது. இவர்கள் மூவருமே மிகவும் அதிர்ச்சியாக தங்களுடைய முகங்களை டிவியில் பார்க்கின்றனர்.

பின் நடிகர் கமல்ஹாசன் "இரண்டு வருடங்களாக பார்க்கிறோம் பிக்பாஸ் ஷோவில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முகம், ஆனால் பார்க்க பார்க்கத்தான் தெரிகிறது, அவங்களுடைய முகம் மட்டும் அல்ல நம்முடைய உண்மையான முகமும் கூட என கூறுகிறார்.

இதை தொடர்ந்து கமலின் ஃ பேரைட் வசனமான, "பிக்பாஸ்...   15 போட்டியாளர்கள், 60 கேமராக்கள்... ஒரே வீட்டில், இது வெறும் ஷோ அல்ல, நம்ப லைப் என கூறுகிறார்". 

கடந்த இரண்டு சீசன்களில், 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை 15 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் என்பதை கவனித்தீர்களா?

இந்த ப்ரோமோ இதோ...