கண்ணம்மாவை கொலைசெய்ய துணிந்த தீவிரவாதி..கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் டீம்
பாவீடியோவை ஒன்றை அந்த தீவிரவாதிகளில் ஒருவராக நடித்த பிரபல நடிகர் மெட்ராஸ் லிங்கேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நல்ல ரேட்டிங்கை பெற்று வந்த பாரதி கண்ணம்மா சில காலமாக தனது பேன்ஸ் பேஸை இழந்துவிட்டது. மிக சுவாரஸ்யம் குறைவான காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்ததால் ரசிகர்களுக்கு சலிப்புத்தட்ட மற்ற சேனல் சீரியல்களை காண ஆர்வம் அவர்களுக்கு அதிகரித்ததாகவே தெரிகிறது. இதனை ஒட்டி இந்த சீரியலில் மேலும் திருப்பங்களை சேர்க்க எண்ணிய டீம் பீஸ்ட் பட ரேஞ்சுக்கு தீவிரவாதிகளை களம் இறக்கியது. அதன்படி கண்ணம்மா, பாரதி இருவரும் வேலை செய்யும் மருத்துவமனையில் அமைச்சர் ஒருவர் அட்மிட் ஆகிறார்.
அந்த அமைச்சருக்கு பாரதி தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அந்த நேரத்தில் தீவிரவாதிகள் உள்ளே நுழைகின்றனர். அங்குள்ள அனைவரையும் பிடித்து வைக்கின்றனர். அதில் மருத்துவமனைக்கு வரும் பாரதியின் தம்பி, தம்பியின் மனைவி, கண்ணம்மா, கண்ணம்மாவின் மக்கள் லட்சுமி, பாரதி என அனைவரும் மாட்டிக் கொள்ள இதற்கிடையே ஹேமாவும் லட்சுமி மற்றும் தந்தையை காணும் ஆர்வத்தில் உள்ளே வந்து சிக்கிக் கொள்கிறார்.
மேலும் செய்திகளுக்கு... பிரபல ஹீரோயின்களுக்குள் சண்டை? மனமுடைந்து சீரியலை விட்டு விலகி ராதிகா
இதற்கிடையே தீவிரவாதிகளில் ஒருவன் மிகவும் மோசமானவனாக இருக்கிறான். அவன் அங்குள்ள பெண்களை தவறாக நடத்துகிறார். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த கண்ணம்மா அந்த தீவிரவாதியை கொலை செய்கிறார். இதை அறிந்த தீவிரவாதிகளின் தலைவன் கண்ணம்மா நெற்றியில் துப்பாக்கியை நீட்டி சுட முயல்கிறான். ஆனால் தான் என் கொலை செய்தீன் என பல உண்மைகளை கண்ணம்மா தெரிவித்தும் தீவிரவாதி அதை எல்லாம் ஒப்புக் கொள்ளாமல் கண்ணம்மாவை கொன்றே தீருவேன் எனும் தீர்மானத்திற்கு வருகிறான். இவ்வாறு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது சீரியல்.
மேலும் செய்திகளுக்கு... இவ்ளோ தைரியமா? இரண்டாம் திருமணத்திற்கு அம்மாவை அழைக்கும் கோபி..கடுப்பான ஈஸ்வரி !
இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் டீம் தீவிரவாதிகளாக நடித்த நடிகர்களுடன் கேக் வெட்டிய வீடியோவை ஒன்றை அந்த தீவிரவாதிகளில் ஒருவராக நடித்த பிரபல நடிகர் மெட்ராஸ் லிங்கேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மெட்ராஸ் படம் மூலம் பிரபலமான லிங்கேஷ், ரஜினிகாந்தின் காலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பாரதிகண்ணம்மாவில் தீவிரவாத கூட்டத்தின் தலைவனாக நடித்த வருகிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில் அனுபவம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் இறுக்கமான சூழலுக்கு இடையில் ஒரு இளைப்பாறுதல் பாரதி கண்ணம்மா விடைபெறுகிறேன் என எழுதியுள்ளார். இதன் மூலம் தீவிரவாதிகள் குறித்தான கதைக்களம் விரைவில் முடிவுக்கு வரும் என தெரிகிறது.