’இப்படிப்பட்ட வாத்தியார்களெல்லாம் இன்னும் இருக்கத்தான் செய்யிறாங்க மக்களே...

அரசுப் பள்ளி ஆசிரியர் என்றாலே அவரது முதல் தகுதி ஸ்கூலுக்கு லேட்டாக வந்து சீக்கிரமாக வீடு திரும்புவது என்று இருக்கும்போது’நான் ஒரு நிமிஷம் லேட்டா வந்தாலும் என்னோட ஒரு நாள் ஃபீஸ் பணம் குழந்தைகளுக்கு’ என்று பள்ளியில் போர்டு மாட்டி ஆசிரியர் மிஸ்டர் பெர்ஃபெக்ட் ஆகத் திகழ்ந்துவருகிறார் ஒருவர்.

a school head master is a hero

அரசுப் பள்ளி ஆசிரியர் என்றாலே அவரது முதல் தகுதி ஸ்கூலுக்கு லேட்டாக வந்து சீக்கிரமாக வீடு திரும்புவது என்று இருக்கும்போது’நான் ஒரு நிமிஷம் லேட்டா வந்தாலும் என்னோட ஒரு நாள் ஃபீஸ் பணம் குழந்தைகளுக்கு’ என்று பள்ளியில் போர்டு மாட்டி ஆசிரியர் மிஸ்டர் பெர்ஃபெக்ட் ஆகத் திகழ்ந்துவருகிறார் ஒருவர்.a school head master is a hero

ஆந்திரா தெலுங்கானாவில் அடவிடவுலபள்ளி என்ற சிறிய கிராமத்தின் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சதீஷ்[30]. ஆசிரியர் பணியின் மீது பெருமதிப்பு கொண்ட சதீஷ் துவக்கத்தில் 6 குழந்தைகள் மட்டுமே படித்த பள்ளிக்கு தனது அயராத முயற்சியால் 36 குழந்தைகள் வரை வரவைத்துவிட்டார்.

பள்ளிக்காக தனது சம்பளப்பணத்தில் ஒரு பகுதியை செலவழித்து டாய்லெட் கட்டுவது உட்பட பல நல்ல காரியங்களை செய்துவரும் சதீஷ் குழந்தைகள் தாமதமாகப் பள்ளிக்கு வருவதைத் தடுப்பதற்காக ஒரு யோசனை செய்தார். அதன்படி பள்ளியின் முகப்பில் கடந்த மார்ச் மாதம் ஒரு போர்டைக் கட்டித்தொங்கவிட்டார். அந்த போர்டில்... தலைமை ஆசிரியராகிய நான் பள்ளிக்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலோ ஒரு நிமிடம் சீக்கிரம் சென்றாலோ என்னுடைய அன்றைய சம்பளத்தை [ரூ.1300] மாணவர்களின் நலன் நிதிக்காக ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவரிடம் ஒப்படைத்து விடுகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.a school head master is a hero

அந்த போர்டு மாட்டப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் சதீஷ் ஒரு நாள் கூட தாமதமாக வந்ததில்லையாம். இதே போர்டை மத்த ஆசிரியர்களை மாட்டச் சொன்னா மொத்த சம்பளத்தையும் கொடுக்கவேண்டியிருக்கும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios