ஜொமேட்டோ ஆன்லைன் பேமெண்ட் அக்ரிகேட்டராக செயல்பட ஆர்பிஐ அனுமதி!

ஜொமேட்டோ பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை இணைத்து இந்தியாவில் 'ஆன்லைன் பேமென்ட் அக்ரிகேட்டராக' செயல்பட இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Zomato gets RBI approval to operate as online payment aggregator sgb

ஆன்லைன் உணவு விநியோக தளமான ஜொமேட்டோ (Zomato) ஆன்லைன் பேமெண்ட் அக்ரிகேட்டராக செயல்படுதவற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய அனுமதியைப் பெற்றுள்ளதாக அறிவித்திருக்கிறது.

ஜொமேட்டோ பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை இணைத்து இந்தியாவில் 'ஆன்லைன் பேமென்ட் அக்ரிகேட்டராக' செயல்பட இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக ஜொமேட்டோ நிறுவனம் கூறியுள்ளது.

இருப்பினும் பங்குசந்தைகள் முடிவடையும் போது ஜொமேட்டோ நிறுவனப் பங்குகள் ரூ.136.00 க்கு வர்த்தகம் செய்யப்பட்டன. நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு தற்போது ரூ.1,18,468 கோடியாக உள்ளது.

Zomato gets RBI approval to operate as online payment aggregator sgb

சமீபத்தில், ஜொமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல், புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 15, 16, 17, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஜொமேட்டோ மூலம் பல ஆர்டர்கள் செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார். புத்தாண்டில் வாடிக்கையாளர்கள் தங்கள் டெலிவரி ஏஜெண்டுகளுக்கு ரூ.97 லட்சத்துக்கும் மேல் டிப்ஸ் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

2015 முதல் 2020ஆம் ஆண்டு வரை புத்தாண்டுக்கு முந்தைய இரவில் வந்த ஆர்டர்களை விட மிகவும் அதிகமான ஆர்டர்கள் இந்தப் புத்தாண்டில் கிடைத்துள்ளன என்றும் தீபிந்தர் கோயல் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

ஜாவா முதல் ராயல் என்ஃபீல்டு வரை... இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் டாப் 5 பைக்குகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios