நிழல் இல்லாத நாள்! நிழல்கள் காணாமல் போகும் அரிய வானியல் நிகழ்வு! மிஸ் பண்ணாம பாருங்க!

நிழல் இல்லாத நாள் என்பது ஒரு அரிதான நிகழ்வாகும். இது பூமியின் சாய்வு மற்றும் சூரியனைச் சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையின் காரணமாக நிகழ்கிறது. இந்த குறிப்பிட்ட நேரத்தில், செங்குத்தான எதற்கும் நிழல்கள் விழாது.

Zero Shadow Day: Bangalore To Witness THIS Astronomical Miracle On August 18

2023 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக, ஆகஸ்ட் 18ஆம் தேதி, நிழல் இல்லாத நாள் எனப்படும் புகழ்பெற்ற வானியல் நிகழ்வை காண பெங்களூரு தயாராகி வருகிறது. மதியம் 12:24 மணிக்கு சூரியன் சரியாக உச்சியில் இருக்கும்போது சிறிது நேரத்திற்கு இந்த அபூர்வ வானியல் நிகழ்வைக் காணலாம்.

மனிதர்கள், மின் கம்பங்கள் போன்ற செங்குத்தான எதுவும் இந்த நிழல் இல்லாத நாள் நிகழ்வின்போது தரையில் எந்த நிழலும் இல்லாமல் காணப்படும். சூரியன் உச்சியில் இருக்கும் வரை நிழலைப் பார்க்க முடியாது என வானியலாளர் அலோக் சொல்கிறார்.

நிழல் இல்லாத நாள் என்றால் என்ன?

நிழல் இல்லாத நாள் என்பது ஒரு அரிதான நிகழ்வாகும். இது பூமியின் சாய்வு மற்றும் சூரியனைச் சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையின் காரணமாக நிகழ்கிறது. இந்த குறிப்பிட்ட நேரத்தில், செங்குத்தான எதற்கும் நிழல்கள் விழாது.

Zero Shadow Day: Bangalore To Witness THIS Astronomical Miracle On August 18

இந்த நிகழ்வை விளக்கும் இந்திய வானியல் சங்கம், சூரியன் ஒரு பொருளின் மீது சரியாக உச்சியில் இருக்கும் போது அந்தப் பொருளின் நிழல் கீழே விழாது என்று சொல்கிறது. அட்சரேகையின் +23.5 மற்றும் -23.5 டிகிரி புள்ளிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் இரண்டு முறை இந்த நிகழ்வு உண்டாகிறது. இந்த நாட்களில் மதியத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு எந்த ஒரு பொருளும் நிழலுடன் இருக்காது என இந்திய வானியல் சங்கத்தின் இணையதளம் விளக்குகிறது.

எந்த நேரத்தில் நடக்கும்?

இந்த ஆண்டு ஏப்ரல் 18 அன்று, பெங்களூரில் மதியம் 12.17 மணியளவில், நிழல் இல்லாத நாள் நிகழ்வு நடந்தது. ஹைதராபாத்தில் மே 9ஆம் தேதியும், ஆகஸ்ட் 3ஆம் தேதி மதியம் 12:23 மணிக்கும் இதே நிகழ்வுகள் காணப்பட்டன. தற்போது பெங்களூரில் மீண்டும் நாளை (ஆகஸ்ட் 18ஆம் தேதி) இந்த வானியல் நிகழ்வைக் காணலாம். நாளை பிற்பகல் 12.17 மணிக்கு இந்த நிகழ்வு தொடங்கும். பிற்பகலில் பொருட்கள் எல்லாம் நிழலை இழந்து நிற்பதைக் காணமுடியும்.

Zero Shadow Day: Bangalore To Witness THIS Astronomical Miracle On August 18

எவ்வாறு காண்பது?

நீங்கள் இருக்கும் இடத்தின் கூரையிலோ அல்லது தரையிலோ, தண்ணீர் பாட்டில்கள், டார்ச்ச்கள், பாட்டில்கள், கம்பிகள், குழாய்கள் போன்ற செங்குத்தான பொருட்களை சூரிய ஒளியில் வைத்துப் காத்திருக்க வேண்டும். அப்போது நேரம் செல்லச் செல்ல நிழல் நீளம் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பார்க்கலாம். மதியம் 12:17 முதல் 12:24 மணிக்குள் நிழல் முற்றிலும் மறைந்துவிடும். ஜீரோ ஷேடோ நேரம் இப்போது தொடங்குகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios