Youtube Update: ஸ்மார்ட் டிவியிலும் Youtube Shorts பார்க்கலாம்!
யூடியூப் ஷார்ட்ஸ் வீடியோக்கள் ஆண்ட்ராய்டு டிவியிலும் பார்க்கும் வகையில் அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. ஸ்மாரட்போன்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் வீடியோவை, டிவியில் கொண்டு வருவது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
டிக்டாக், இன்ஸ்டாகிராமைப் போல் யூடியூப்பிலும் ஷார்ட்ஸ் வீடியோ வசதி அண்மையில் கொண்டு வரப்பட்டன. மற்ற இயல்பான வீடியோக்களை விட ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
மொபைலில் இருந்து டிவி வரை:
பெரிய திரையில் “ஷார்ட்ஸ்” பார்ப்பதால் குறிப்பிட்ட பலன்கள் உள்ளதாக கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, பெரிய திரையில் மற்றவர்களுடன் சேர்ந்த அமர்ந்து ஷார்ட்ஸ் வீடியோக்களைப் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஷார்ட் வீடியோ என்பது செங்குத்தான ஸ்மார்ட்போன் திரைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வீடியோ. ஆனால், டிவி என்பது அகன்ற திரையுடன் இருக்கும். பிறகு, எப்படி செங்குத்தான ஷார்ட் வீடியோக்களை அகன்ற திரையில் பார்க்க முடியும் என்று கேள்வி எழுந்தது.
இதைக் கருத்தில் கொண்டு புதுவிதமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில், அகன்ற திரைக்கு ஏற்றாற் போல் ஷார்ட் வீடியோக்களின் தோற்றம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வீடியோ நடுவில் ஓடிக்கொண்டிருக்கும் போது, அதற்கு முந்தைய வீடியோ, பிந்தைய வீடியோவானது இடதுபுறத்திலும், வலதுபுறத்திலும் மங்கலான வெளிச்சத்தில் இருக்கம். இவ்வாறு மூன்று ஷார்ட் வீடியோக்கள் அகன்ற திரையை நிரப்பிவிடும்.
இதுதவிர மேலும் இரண்டு விதமான டிசைன்களும் உள்ளன.
WhatsApp Update: இனி உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பலாம்!
டிவியில் ஷார்ட்ஸ் வீடியோ எப்போது கிடைக்கும்?
இன்று செவ்வாய் முதல் டிவிகளில் ஷார்ட்ஸ் வீடியோக்கள் தெரியும். உங்கள் டிவியில் யூடியூப் அப்டேட் ஆகாமல் இருந்தால், அப்டேட் செய்து பார்க்கவும். ஸ்மார்ட் டிவிகளில் மட்டுமில்லாமல், Fire Stick, Chromecast போன்ற ஸ்ட்ரீமிங் சாதனங்கள், கேமிங் கன்சோல்கள் என 2019 ஆம் ஆண்டு, அல்லது அதற்கு பிறகு வெளிவந்த சாதனங்கள் மூலமாக ஷார்ட்ஸ் வீடியோக்களைப் பார்க்கலாம்.
யூடியூப்பில் ஷார்ட்ஸ் வீடியோ கிரியேட்டர்களுக்காக சுமார் 100 மில்லியன் டாலர் நிதியை யூடியூப் நிறுவனம் ஒதுக்கியுள்ளது. தகுதியுள்ள ஷார்ட்ஸ் வீடியோ படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.