ஐபோன் தொலைந்து போனால் அது உங்க பொறுப்பு: உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

நுகர்வோருக்கு ஆப்பிள் இழப்பீடு வழங்கியதை ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம், இறுதியில் ஆப்பிள் நிறுவனத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. திருடப்பட்ட ஃபோன்களைக் கண்காணிக்க வேண்டும் என்று கோருவது "அவசியமற்றது" என்றும் அது அவர்களின் பொறுப்பு அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

Your lost iPhone is your responsibility, not Apple's, rules Supreme Court sgb

திருடப்பட்ட ஐபோன்களை அவற்றின் தனித்துவமான அடையாள எண்களைப் பயன்படுத்தி கண்காணிக்க வேண்டிய பொறுப்பு ஆப்பிள் இந்தியா நிறுவனத்துக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒடிசா மாநில நுகர்வோர் ஆணையத்தின் முந்தைய உத்தரவை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வங்கியுள்ளது.

ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் திருட்டு காப்பீட்டுடன் ஐபோன் ஒன்றை வாங்கி, அது திருடப்பட்டதாக காவல்துறை மற்றும் ஆப்பிள் இந்தியா ஆகிய இரண்டிற்கும் புகாரளித்தார்.

ஆப்பிள் நடவடிக்கை எடுத்து மொபைல் எங்கே இருக்கிறது என்று கண்காணிக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் ஆப்பிள் அதைச் செய்யவில்லை. இது குறித்து வாடிக்கையாளர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தார். அதில் வாடிக்கையாளருக்குச் சாதகமாகவே தீர்ப்பளித்தது. இருப்பினும், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து ஆப்பிள் மேல்முறையீடு செய்தது.

CE20 கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை முடிவு! இஸ்ரோ கொடுத்த ககன்யான் அப்டேட்!

Your lost iPhone is your responsibility, not Apple's, rules Supreme Court sgb

நுகர்வோர் நீதிமன்றம் அதன் தீர்ப்பில், உற்பத்தியாளர் என்ற முறையில் ஐபோனின் தனித்துவ அடையாளங்காட்டியை பயன்படுத்து அதன் இருப்பிடத்தைக் கண்காணிக்க ஆப்பிள் நிறுவனம் கடமைப்பட்டுள்ளது என்று கூறியது. இருப்பினும், அவ்வாறு செயல்பட சட்டரீதியான அனுமதி இல்லை என்று ஆப்பிள் வாதிட்டு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

நுகர்வோருக்கு ஆப்பிள் இழப்பீடு வழங்கியதை ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம், இறுதியில் ஆப்பிள் நிறுவனத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. திருடப்பட்ட ஃபோன்களைக் கண்காணிக்க வேண்டும் என்று கோருவது "அவசியமற்றது" என்றும் அது அவர்களின் பொறுப்பு அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் நிறுவனங்களின் கடமைகள் குறித்த வரம்புகளைத் தெளிவுபடுத்தும் வகையில், மாநில நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து சர்ச்சைக்குரிய பத்தியை நீக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செம சூடு... திடீரென தீப்பிடித்து கையைப் பொசுக்கிய ஐபோன் சார்ஜர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios