மூச்சுக்காற்று மூலம் ஸ்மார்ட்போன் அன்லாக் செய்யலாம்! அசத்தும் சென்னை ஐஐடி குழுவினர்!
ஆரம்பத்தில் மருந்து தயாரிப்பு தொடர்பாக சுவாச பிரச்சனைகள் உள்ள நபர்களை அடையாளம் காணும் திறன் கொண்ட AI மாதிரியை உருவாக்கும் நோக்கில் இந்த ஆராய்ச்சித் தொடங்கினர். ஆனால், எதிர்பாராத விதமாக அவர்களின் ஆரம்ப எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட தரவுகள் கிடைத்துள்ளன.
சுவாசத்தின் போது காற்றில் ஏற்படும் கொந்தளிப்பு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களைத் திறப்பதற்கான சாத்தியமான பயோமெட்ரிக் அங்கீகார முறையாக செயல்படும் திறனைக் கொண்டுள்ளது. உயிருடன் இருக்கும் நபரால் மட்டுமே இந்த முறையை பயன்படுத்த முடியும் என்பதால் கைரேகை ஸ்கேன் போன்ற பிற முறைகளைவிட இது பாதுகாப்பானதாக இருக்குக்கூடும்.
சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள மகேஷ் பஞ்சாக்னுலா மற்றும் அவரது குழுவினர் இதைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் காற்று அழுத்த சென்சார் மூலம் பதிவுசெய்யப்பட்ட சுவாசத் தரவுகளைக் கொண்டு சோதனைகளை மேற்கொண்டனர்.
ஆரம்பத்தில் மருந்து தயாரிப்பு தொடர்பாக சுவாச பிரச்சனைகள் உள்ள நபர்களை அடையாளம் காணும் திறன் கொண்ட AI மாதிரியை உருவாக்கும் நோக்கில் இந்த ஆராய்ச்சித் தொடங்கினர். ஆனால், எதிர்பாராத விதமாக அவர்களின் ஆரம்ப எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட தரவுகள் கிடைத்துள்ளன.
7 நிமிடத்தில் வேலை போச்சு! ஐபிஎம் ஊழியர்களுக்கு வில்லனாக மாறிய AI டெக்னாலஜி!
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் 94 பேரிடம் தலா 10 முறை சுவாசங்களைப் பதிவுசெய்துள்ளனர். காற்றழுத்த உணரியைப் பயன்படுத்தி வினாடிக்கு 10,000 முறை அளவீடுகளை எடுத்துள்ளனர்.ச
செயற்கை நுண்ணறிவு மாடலைக் கொண்டு சுவாசத் தரவை பகுப்பாய்வு செய்துள்ளனர். அதில் 97 சதவீதத்திற்கும் அதிகமான துல்லியத்துடன் ஒரு சவாசம் குறிப்பிட்ட நபரிடமிருந்து வந்ததா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த AI மாடலானது, மூக்கு, வாய் மற்றும் குரல்வளை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒவ்வொரு நபரின் எக்ஸ்ட்ராடோராசிக் பகுதியின் தனித்துவமான உடற்கூறியல் அமைப்பில் இருந்து எழும் கொந்தளிப்பின் வடிவங்களைக் கண்டறிகிறது.
பூமியை ஊடுருவிச் சென்ற 7 வினோதப் பொருட்கள்! அடுத்து என்ன நடக்கப்போகுது? விஞ்ஞானி விளக்கம்