எண்ணி எண்ணி எழுத வேண்டாம்... ட்விட்டரில் வரும் புது மாற்றம்... எப்போ வெளியாகுது தெரியுமா?
பல்வேறு நாடுகளை சேர்ந்த பயனர்கள் நோட்ஸ்-களை ட்விட்டரில் பார்க்க முடியும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
twitter, twitter notes, social media,
ட்விட்டரில் பயனர்கள் விரைவில் நீண்ட நெடிய கருத்துக்களை எழுத முடியும். ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் வழங்குவதற்காக புது அம்சம் ஒன்றை சோதனை செய்து வருகிறது. ட்விட்டர் நிறுவனம் ட்விட்டர் நோட்ஸ் பெயரில் புது அம்சம் வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் 280 வார்த்தைகள் அடங்கிய பதிவுகளை ட்விட்டரில் வெளியிட முடியும்.
தற்போது இந்த அம்சம் அமெரிக்கா, லண்டன், கனடா மற்றும் கானா போன்ற நாடுகளில் தேர்வு செய்யப்பட்ட பயனர்கள் இடையே சோதனை செய்து வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பயனர்கள் நோட்ஸ்-களை ட்விட்டரில் பார்க்க முடியும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புது அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதை விளக்கும் ஜிஃப் ஒன்றை ட்விட்டர் வெளியிட்டு இருக்கிறது.
ட்விட்டர் நோட்ஸ்:
புது அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் 'Write' டேப்-ஐ க்ளிக் செய்து நோட் எழுத முடியும். எழுதி முடித்ததும், நோட்-ஐ ட்வீட்-இல் எம்பெட் செய்து கொள்ள முடியும். ஏற்கனவே பலர் ட்விட்டர் தளத்தில் நோட்ஸ்-ஐ பதிவிட்டு உள்ளனர். ட்விட்கள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய நீண்ட பதிவுகளாக நோட்ஸ் காட்சி அளிக்கிறது.
இது மட்டும் இன்றி ட்விட்டர் நிறுவனம் ஏழு ஆண்டுகள் கழித்து டெவலப்பர்கள் நிகழ்வை நடத்த இருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தின் டெவலப்பர்கள் நிகழ்வு நவம்பர் 16. 2022 அன்று சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற இருக்கிறது. நேரடியாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்கள் டெவலப்பர்கள் நிகழ்ச்சியை நேரலை செய்ய ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்து உள்ளது.