70 இன்ச் பெரிய அளவு திரையுடன் Redmi 4K Smart TV A70 அறிமுகம்!
ஷாவ்மி நிறுவனம் ரெட்மி ஸ்மார்ட் டிவி A70 என்ற புதிய 4K தொலைக்காட்சியை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 70-இன்ச் அளவிலான பெரிய திரையுடன், 4K பேனல், அல்ட்ரா-நாரோ பெசல்கள், 96% திரை அளவு, மெட்டல் யூனிபாடி ஃப்ரேம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த Redmi Smart A70 டிவியில் குவாட் கோர் பிராசசர், மாலி GPU மற்றும் 1.5GB ரேம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. Xiaomi TV Assistant செயலியும் உள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனில் இருந்தே டிவியை இயக்கலாம், சேனலை மாற்றலாம், OTT பார்க்கலாம். மேலும், வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளதால், குரல் மூலமாகவே டிவியை இயக்கலாம்.
Redmi Smart TV A70 ஆனது சீனாவில் 2,999 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34,245) விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விற்பனையில் உள்ளது. இந்தியாவில் இன்னும் ஒருசில மாதங்களில் இந்த டிவி அறிமுகம் செய்யப்படலாம் எனு்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.9 ஆயிரம் பட்ஜெட்டில் Moto E22S அறிமுகம்!
Redmi Smart TV A70 சிறப்பம்சங்கள்:
70-இன்ச் (3840 × 2160 பிக்சல்கள்) 178 டிகிரி கோணத்துடன் கூடிய 4K டிஸ்ப்ளே, 96% திரை-பாடிக்கும் உள்ள விகிதம், 5000:1 வரையிலான மாறுபட்ட விகிதம் வழங்கப்பட்டுள்ளன. மாலி GPU உடன் குவாட்-கோர் கார்டெக்ஸ் பிராசசர், 1.5 ஜிபி ரேம், 8 ஜிபி ஸ்டோரேஜ், MIUI டிவி, Xiaomi TV Assistant ஆப்ஸ் மூலம் வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளன. மேலும், சேனல் மாற்றம், நுண்ணறிவு திரை ப்ரொஜெக்ஷன், டிவி ஸ்கிரீன் ஸ்கிரீன்ஷாட்கள், ஏர் இன்ஸ்டாலேஷன் அப்ளிகேஷன்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன.
டிவியின் வெளிப்புறத்தில் Wi-Fi 802.11 ac (2.4GHz), 2 x HDMI 2.0 (1 ARC உள்ளது), 2 USB, S/PDIF, ஈதர்நெட், AV Input, 20W (2 x 10w) ஸ்பீக்கர்கள், பிரத்யேக பேஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை உ்ளளன. அமேசானின் கிரேட் இந்தியன் சேலில் ரெட்மி டிவி அதிகளவில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.