சியோமி 12 சீரிசில் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
சியோமி நிறுவனம் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்த சியோமி 12 ஸ்மார்ட்போனின் லைட் வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் சர்வதேச சந்தையில் சியோமி 12 லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது சியோமி நிறுவனம் கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்த சியோமி 12 ஸ்மார்ட்போனின் டோன்-டவுன் வெர்ஷன் ஆகும். சியோமி 12 லைட் என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன், அதன் பெயருக்கு ஏற்றார் போல் அம்சங்களும் மிட் ரேன்ஜ் அளவிலேயே வழங்கப்பட்டு உள்ளன.
இதையும் படியுங்கள்: சார்ஜர் இன்றி விற்பனைக்கு வரும் நத்திங் போன் (1).... வீடியோவில் வெளியான தகவல்..!
புதிய சியோமி 12 லைட் 5ஜி மாடலின் மொத்த எடை 173 கிராம்களாகவே உள்ளது. அம்சங்களை பொருத்தவரை சியோமி 12 லைட் 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், 6 ஜிபி / 8 ஜிபி ரேம், அதிகபட்சம் 256ஜிபி மெமரி, 6.55 இன்ச் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்ப்லிங் ரேட் உள்ளது.
இதையும் படியுங்கள்: அம்பானி உடன் போட்டி... 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதானி குழுமம்...!
சியோமி 12 லைட் அம்சங்கள்:
- 6.55 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி 6nm பிராசஸர்
- அட்ரினோ 642L GPU
- 6 ஜிபி /8 ஜிபி LPDDR4X ரேம்
- 128 ஜிபி / 256 ஜிபி UFS 2.2 மெமரி
- MIUI 13 மற்றும் ஆண்ட்ராய்டு 12
- டூயல் சிம் ஸ்லாட்
- 108MP பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி பிளாஷ்
- 8MP 120° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 32MP செல்பி கேமரா
- யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, 6, ப்ளூடூத் 5.2
- யுஎஸ்பி டைப் சி
- 4300mAh பேட்டரி
- 67 வாட் பாஸ்ட் சார்ஜிங்
இதையும் படியுங்கள்: பட்ஜெட் விலையில் 5ஜி போன்கள் அறிமுகம்... கூடவே சலுகையும் அறிவித்து இன்பினிக்ஸ் அதிரடி..!
விலை விவரங்கள்:
சியோமி 12 லைட் ஸ்மார்ட்போன் லைட் கிரீன், லைட் பின்க் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 399 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 31 ஆயிரத்து 635 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 449 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 35 ஆயிரத்து 600 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 565 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.