முதலிடத்தை பிடித்தது "சியோமி ".....ரெட்மி நோட் 4 அமோக விற்பனை....
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன் விற்பனையில் களமிறங்கினாலும், ஒரு குறிப்பிட்ட நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு என்றுமே அதிக வரவேற்பு தான்.
அந்த வரிசையில் சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் முதலிடத்தை பிடித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. முன்னதாக முதலிடத்தில் இருந்த ஆப்பிள்,சாம்சங் நிறுவனத்தை சற்று பின்னுக்கு தள்ளி, 2௦14 ஆம் ஆண்டு இந்தியாவில் சந்தைக்கு வந்த சியோமி நிறுவனம் தனது தரமிக்க ஸ்மார்ட்போன்களால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
பட்டியலில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஸ்மார்ட்போன் பொறுத்தவரை, கேமரா திரை அளவு, உள்ளிட்ட சில பண்புகளின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகிறது.அதனடிப்படையில், சமீபத்தில் வெளியான சியோமி நிறுவன மொபைல் ரெட்மி நோட் 4 மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக சியோமி நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 125 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .