Amazon Order Issue: எலெக்ட்ரிக் டூத்பிரஷ் கேட்ட பெண்ணுக்கு அமேசான் கொடுத்த ஷாக்!
அமேசானில் டூத்பிரஷ் கேட்டவருக்கு மசாலா பொருட்களை அனுப்பியுள்ளார்கள். இதுபோன்ற ஏமாற்று வேலை தொடர்ந்து நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.
அமேசானில் ரூ.12 ஆயிரத்துக்கு எலெக்ட்ரிக் டூத்பிரஷ் ஆர்டர் செய்தவருக்கு மசாலா பொருட்கள் அனுபப்பட்டு இருக்கிறது.
மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்மணி அமேசான் இணையதளத்தில் ரூ.12,000 விலை உள்ள எலெக்ட்ரிக் டூத்பிரஷ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு மசாலா பாக்கெட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. ஏமாற்றம் அடைந்த அந்தப் பெண்மணியின் மகள் ட்விட்டரில் இதுபற்றிப் பதிவிட்டுள்ளார்.
“அன்புள்ள அமேசான், ஒரு வருடத்திற்கு மேலாக வாடிக்கையாளர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் விற்பனையாளரை இன்னும் ஏன் நீக்கவில்லை? என் அம்மா 12 ஆயிரம் ரூபாயாக்கு ஓரல்-பி டூத்பிரஷ் ஆர்டர் செய்தார். ஆனால் 4 எம்டிஹெச் சாட் மசாலா பெட்டிகளை அனுப்பி இருக்கிறார்கள். MEPLTD என்ற விற்பனையாளர் ஜனவரி 2022 முதல் அமேசானில் ஆர்டர் செய்பவர்களை இவ்வாறு ஏமாற்றிவருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Paula Hurd: டென்னிஸ் களத்தில் மலர்ந்த காதல்! பில் கேட்ஸின் புதிய காதலி பவுலா ஹர்ட்!
இத்துடன் குற்றம்சாட்டியுள்ள விற்பனையாளர் பற்றி அமேசான் தளத்திலேயே மற்ற வாடிக்கையாளர்கள் கூறியுள்ள புகார்களின் ஸ்க்ரீன்ஷாட்டையும் இணைத்துள்ளார்.
இந்த விற்பனையாளர் மற்றவர்களைவிட ரூ.1000 முதல் ரூ.3000 வரை விலையைக் குறைத்து வைக்கிறார்கள் என்றும் விலை குறைவாக இருக்கிற காரணத்தால் யோசிக்காமல் ஆர்டர் செய்துவிடும் வாடிக்கையாளர்களை இப்படி ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் அந்தப் பெண் புகார் கூறியுள்ளார்.
புதிய Twitter CEO அதிகாரியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்! நெட்டிசன்கள் அதிர்ச்சி!
ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள் விற்பனையாளரைப் பற்றியும் ஆராய்ந்து, யோசித்துப் பார்த்து ஆர்டர் செய்வது நல்லது என்றும் அந்தப் பெண் எச்சரித்துள்ளார்.
இந்த பதிவு அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பதிவுக்கு பதில் அளிக்கும் பலரும் தங்கள் அனுபவங்களையும் கூறிவருகிறார்கள். அதில் ஒருவர், “2021ஆம் ஆண்டு நானும் எலெட்க்ரிக் டூத்பிரஷ் ஆர்டர் செய்திருந்தேன். ஆனால் சாதாரண டூத்பிரஷ்தான் அனுப்பினார்கள். அதுவும் இதே விற்பனையாளர்தான். இப்போது பெயரை மாற்றிக்கொண்டுவிட்டார்கள் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதிசயத்தைப் பாருங்க! மஞ்சள் கருவுக்குப் பதில் பச்சை கருவுடன் முட்டையிடும் கோழிகள்!