ஆதார் இல்லையென்றால் செல்போன் சேவை துண்டிப்பு ....!! உச்சநீதிமன்றம் அதிரடி ....!!
ஆதார் எண் :
ஆதார் எண் தற்போது அனைத்து துறைகளிலும், இணைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒருவருடைய அனைத்து விவரங்களையும் நொடி பொழுதில் கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டு முதல், வங்கி கணக்கு என அனைத்திலும் ஆதார் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
கட்டாயம் :
இந்நிலையில், செல்போன் சேவைகளைப் பெறவும் ஆதார் எண் கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் , ஆதார் எண் இல்லாமல் எதுவும் நகராது என்பது குறிபித்தக்கது.
செல்போன் சேவை துண்டிப்பு :
செல்போன் தொடர்பான சேவைகளைப் பெறவும், இனி ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மேலும், ஓர் ஆண்டுக்குள் செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.