டீசல் கார் உற்பத்தி அதிரடி நிறுத்தம்...ஏன் ?
பெட்ரோலை விட டீசல் விலை குறைவு மற்றும் அதிக மைலேஜி தரும் என்பதற்காகவும், பலரும் டீசலில் இயங்கக்கூடிய காரை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது டீசல் கார் விற்பனை சரிந்துள்ளது. மாருதி நிறுவனம், செலரியோ டீசல் கார் உற்பத்தியை ஏற்கனவே நிறுத்த போவதாக அறிவித்து இருந்தது என்பது குறிபிடத்தக்கது.
5 இல் 1 கார் மட்டுமே விற்பனை :
பலேனோ, கிராண்ட் ஐ1௦ உள்ளிட்ட காம்பாக்ட் கார்களில், ஐந்தில் ஒரு கார் தான் டீசல் இன்ஜினுடன் விற்கப்படுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
காரணம் :
கடந்த 2௦14 ஆம் ஆண்டு , பெட்ரோலுக்கும் டீசலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 2௦ ஆயிரம் ரூபாயாக உள்ளது. ஆனால் தற்போது 1௦ ரூபாயாக உள்ளது டீசல் கார் விற்பனை குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாகவே உள்ளது.
அதே சமயத்தில், பெரிய ரக டீசல் கார்களுக்கு மக்களிடையே வரவேற்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.