Asianet News TamilAsianet News Tamil

இந்த ஐபோன்களில் வாட்ஸ்அப் சேவை விரைவில் நிறுத்தம்... வெளியான புது தகவல்...!

பாதுகாப்பு சார்ந்த பிழை திருத்தங்கள் ஒவ்வொரு ஐ.ஓ.எஸ். அப்டேட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஐ.ஓ.எஸ். தளத்தை அப்டேட் செய்வது சிறந்தது. 

WhatsApp to discontinue support for iOS 10 and iOS 11
Author
India, First Published May 22, 2022, 4:20 PM IST

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. உலகம் முழுக்க அதிக பயனர்களை கொண்டிருக்கும் வாட்ஸ்அப் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் பிரபல குறுந்தகவல் செயலியாக விளங்குகிறது. அவ்வப்போது செயலியில் மாற்றங்களை ஏற்படுத்தி, புது அம்சங்கள் வழங்குவதை வாட்ஸ்அப் வாடிக்கையாக கொண்டு இருக்கிறது.

இதோடு செயலியில் வழங்கப்படும் புது அம்சங்கள் பழைய ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் இயங்காமல் போகலாம் என்பதால், சீரான இடைவெளியில் பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் வாட்ஸ்அப் இயங்குவதற்கான ஆதரவு நீக்கப்பட்டு வருகிறது. 

வாட்ஸ்அப் நிறுத்தம்:

அந்த வரிசையில், ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கி வரும் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5C மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் வாட்ஸ்அப் ஆதரவு அடுத்த சில மாதங்களில் நிறுத்தப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட்டை wabetainfo வெளியிட்டு உள்ளது. அதன்படி ஐ.ஓ.எஸ். 10 மற்றும் ஐ.ஓ.எஸ். 11 கொண்ட ஐபோன்களில் வாட்ஸ்அப் சேவை அக்டோபர் 24, 2022 முதல் இயங்காது  என ஸ்கிரீன்ஷாட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

WhatsApp to discontinue support for iOS 10 and iOS 11

வாட்ஸ்அப் ஹெல்ப் செண்டர் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களின் படி, வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 மற்றும் அதன் பின் வெளியிடப்பட்ட வெர்ஷன்கள் சிறப்பானது மற்றும் பிரந்துரைக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது. 

புது அப்டேட்:

ஐபோன் 5S, ஐபோன் 6 அல்லது ஐபோன் 6S போன்ற மாடல்களில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த ஐ.ஓ.எஸ். 12 தளத்திற்கு அப்டேட் செய்வது அவசியம் ஆகும். வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் சில புது அம்சங்கள் பழைய ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் இயங்காது. 

பாதுகாப்பு சார்ந்த பிழை திருத்தங்கள் ஒவ்வொரு ஐ.ஓ.எஸ். அப்டேட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஐ.ஓ.எஸ். தளத்தை எப்போதும் அப்டேட் செய்து கொள்வது சிறந்தது. 

முன்னதாக வெளியான பீட்டா அப்டேட்களில் வாட்ஸ்அப் செயலியின் க்ரூப்களில் இருந்து சத்தமின்றி வெளியேறும் வசதி வழ்ங்கப்பட்டு இருந்தது. இதோடு ரிச் லின்க் பிரீவியூ அம்சம் டெக்ஸ்ட் மெசேஜ் ஸ்டேட்டஸ், குயிக் ரியாக்‌ஷன்ஸ், சாட் மெனு உள்ளிட்டவைகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios