Asianet News TamilAsianet News Tamil

WhatsApp Update: நீங்கள் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாதா? வருகிறது புதிய அப்டேட்

நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது உங்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸ் மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கும் வகையில் ஒரு சூப்பரான அப்டேட் வரவுள்ளது.
 

WhatsApp online status hide feature that lets users hide online status
Author
First Published Sep 15, 2022, 10:19 PM IST

வாட்ஸ்அப்பில் பயனர்களுக்கு பயனுள்ள வகையில் புதுப்புது அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. குறிப்பாக தனியுரிமை சார்ந்த விஷயங்களில் வாட்ஸ்அப் நிறுவனம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் ‘ஆன்லைன் ஸ்டேட்டஸ்’ ஆப்ஷனை நிர்வகிக்கும் புது வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வாட்ஸ்அப்பை நாம் பயன்படுத்துகின்றோம் என்றாலே, நாம் ஆன்லைனில் தான் இருக்கிறோம் என்பது மற்றவர்களுக்கு தெரிந்து விடும். இது சில நேரங்களில் சிலருக்கு பாதகமாக அமைந்து விடுகிறது. நம் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் நாம் ஆன்லைனில் இருந்து கொண்டே அவர்களுக்கு பதிலளிக்கவில்லை என்றால், நம்மிடம் கேள்வி கேட்பார்கள். இது தர்ம சங்கடமான நிலைக்கு கொண்டு சென்று விடும். இதனால் நமக்கும் அவர்களுக்கும் மனக்கசிவு உண்டாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

இப்படியான சூழலை தவிர்க்கும் வகையில், தனியுரிமையை பாதுகாத்திடும் வகையில், வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட்டை சோதித்து வருகிது. இந்த புதிய அப்டேட்டின் மூலம் நாம் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று நினைத்தால், அதனை மறைத்து வைக்கலாம்.  இந்த புதிய அம்சத்தை வாட்ஸ்அப் பீட்டாவில் பயன்படுத்த முதலில் வாட்ஸ்அப் செட்டிங்கிஸ் செல்ல வேண்டும். அதில் பிரைவசி ஆப்ஷன் செலக்ட் செய்து அதில், அக்கவுண்ட் பக்கம் கொடுத்து ‘Last seen and online’ ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.

Last seen and online கீழ் 2 ஆப்ஷகள் கொடுக்கப்பட்டிருக்கும். ‘Everyone’ மற்றும் ‘same as last seen’ கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ‘same as last seen’ கொடுக்க வேண்டும். 
 அதாவது உங்களின் last seen யாரெல்லாம் பார்க்க வேண்டும் என்று தேர்வு செய்து வைத்திருக்கிறீர்களோ அவர்கள் மட்டும் ‘ஆன்லைன் ஸ்டேட்டஸ்’ பார்க்க முடியும்.
இந்த வசதி வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.20.9, v2.22.20.7 மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் தற்போது நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இந்த வசதி அனைவரது பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios