வாட்ஸ்அப்பில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள அம்சங்களை சிஇஓ மார்க் சக்கர்பெர்க் பட்டியலிட்டுள்ளார். இதில் குறிப்பாக ஒரே கம்யூனிட்டியின் கீழ் பல குழுக்களை நிர்வகிக்கும் வசதி உள்ளது.  

மெட்டா நிறுவனத்தின் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘இன்று நாம் WhatsApp இல் கம்யூனிட்டி என்ற அம்சத்தை கொண்டு வந்துள்ளோம். இதன் கீழ் குழுக்கள், பல நூல்கள், அறிவிப்பு சேனல்கள் என பலவற்றை இயக்கி குழுக்களை மேம்படுத்தலாம். மேலும், கருத்துக்கணிப்புகள் நடத்தும் அம்சமும், 32 பேர் வரையில் கலந்துகொள்ளும் வீடியோ கால் வசதியும் வெளியிடுகிறோம். உங்கள் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கூகுள் மீட், ஜூம் மீட்டிங் போல வாட்ஸ்அப்பிலும் இணைப்பு (Link) மூலம் வீடியோ காலிங்கில் இணையும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மேம்பட்ட அம்சமாக தற்போது வீடியோ காலில் 32 பேர் வரையில் கலந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

ஒரே மாதத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் Airtel 5G சேவைக்கு மாறினர்!

இதேபோல், மற்ற சமூகவலைதளங்களில் Poll எனப்படும் கருத்துக்கணிப்பு பதிவிடும் வசதி இருந்து வருகிறது. அந்த வசதி தற்போது வாட்ஸ்அப்பிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் குழுவில் தீர்க்கமாக ஒரு முடிவு எடுக்க வேண்டுமென்றால், கருத்துக்கணிப்பை பதிவிட்டு, குரூப் உறுப்பினர்கள் அதில் தங்கள் விருப்பங்களை தெரிவிக்கலாம். யார் யார் எந்த பதிலுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதையும் பார்க்கலாம். 

View post on Instagram