WhatsApp செயலியில் பல்வேறு வசதிகள் அறிமுகம்! முழு அப்டேட் இதோ!!
வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் அப்டேட், வாய்ஸ் ஸ்டேட்டஸ், பிடித்தமானவர்களின் ஸ்டேட்டஸை தவறவிடாமல் பார்க்கும் வசதி என பல்வேறு அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.
வாட்ஸ்அப்பை காட்டிலும் டெலகிராம் செயலில் எக்கச்சக்க வசதிகள் வந்துவிட்டன. இதனால் வாட்ஸ்அப் நிறுவனமும் பயனர்களை ஈர்க்கும் வகையில் மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் பீட்டா தளத்தில் சில புதுமையான அம்சங்கள் சோதிக்கப்பட்டு வந்தன. அந்த அம்சங்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
வாய்ஸ் ஸ்டேட்டஸ்:
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 30 வினாடிகள் வரை பயனர்கள் தங்கள் குரலை பதிவு செய்து வாய்ஸ் ஸ்டேட்டஸாக வைக்கலாம். தனிப்பட்ட முறையில் அப்டேட்டுகளை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு இந்த வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சத்தை பயன்படுத்தலாம். குறிப்பாக இது டைப் செய்வதை விட எளிதாக பேசி, குரல் மூலமாகவே பயனர்கள் தங்கள் நிலையை தெரிவிக்கலாம்.
ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்:
உங்கள் நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்டை விரைவாகவும் எளிதாகவும் பார்க்க, அதற்கு பதிலளிக்கும் வகையில், புதிதாக ஸ்டேட்டஸ் ரியாக்ஷன் என்ற அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரியாக்ஷன்கள் பல அறிமுகம் செய்யப்பட்டன. அதன்பிறகு பயனர்கள் மத்தியில் ரியாக்ஷனிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதை மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் தற்போது ரியாக்ஷன்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலே ஸ்வைப் செய்து எட்டு ஈமோஜிகளில் ஒன்றை கிளிக் செய்து, பிடித்த ரியாக்ஷன்களை பதிலாக அளிக்கலாம்.
WhatsApp செயலியில் வரப்போகும் வேற லெவல் அப்டேட். இனி 2ஜிபி வரை…
புதிய ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளுக்கான அடையாளம்:
ஸ்டேட்டஸ் ப்ரொஃபைல் ரிங் என்ற அம்சம் புதிதாக வாட்ஸ்அப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. நமக்கு தேவையானவர்களின் ஸ்டேட்டஸை தவறவிடாமல் பார்ப்பதற்கு, அவர்கள் ஃப்ரொபைலில் இந்த ஸ்டேட்டஸ் ரிங் சேர்த்தால் போதும். அவர்கள் ஸ்டேட்டஸை மாற்றும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அடையாளம் காட்டப்படும்.
ஸ்டேட்டஸ் லிங்க் இருந்தால், எளிதாக பார்க்கலாம்.:
இணையதள இணைப்புகளை ஸ்டேட்டஸாக உங்கள் நண்பர்கள் வைத்திருந்தால், அதை பார்ப்பதற்கு சம்பந்தப்பட்ட இணையதளம் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாட்ஸ்அப்பிலேயே அந்த லிங்க்கை கிளிக் செய்து, அது என்ன தளம், என்ன மெசேஜ் என்பதை முன்னோட்டமாக பார்த்துக்கொள்ளலாம்.