Asianet News TamilAsianet News Tamil

Jio True 5G: அது என்ன True 5G? அசர வைக்கும் அம்சங்கள்..

இந்தியாவில் 5ஜி வந்துள்ள நிலையில், ஜியோ நிறுவனம் True 5G என்று விளம்பரம் செய்து வருகிறது. அது என்ன True 5G, சாதாரணமான 5ஜிக்கும் ட்ரூ 5ஜிக்கும் என்ன வித்தியாம் என்பது பற்றி இங்கு காணலாம். 
 

what is true 5g check Details about Jio true 5G and its speed
Author
First Published Oct 8, 2022, 6:52 PM IST

கடந்த அக்டோபர் 1ம் தேதி நடைபெற்ற  இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து  நாட்டில் முதல் முறையாக ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையை வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஜியோவும் 5ஜி பீட்டா சோதனை முறையில் அமல்படுத்தியது.
 
ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவை என்று விளம்பரம் செய்து வரும் நிலையில், ஜியோ நிறுவனம் True 5G என்று விளம்பரம் செய்து வருகிறது. True 5G என்பது 5ஜி அலைக்கற்றையை பயன்படுத்தும் விதமாகும். 5ஜி நெட்வொர்க் உள்கட்டமைப்பானது இரண்டு வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஒன்று ஸ்டேண்டலோன் மற்றொன்று ஸ்டேண்டலோன் அல்லாத முறை. அதாவது, Standalone, Non-Standalone எனப்படும்.

இதில் Non-Standalone என்பது இதற்கு முன் இருந்த 4ஜி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுவது.  ஏர்டெல் , வோடோபோன் போன்ற நிறுவனங்கள் ‘நான் ஸ்டேண்டலோன்’ முறையை பின்பற்றி 5ஜி கட்டமைப்பை மேற்கொள்கின்றன. ஜியோ நிறுவனமானது ஸ்டேண்டலோன் முறையை பின்பற்றி  5ஜி சேவையை வழங்க உள்ளதாக கூறி உள்ளது. அதாவது, 5ஜிக்கு என்றே பிரத்யேகமாக சிறிய ரக டவர்கள் அமைத்து  5ஜி சேவையை வழங்குவதாகும். ஸ்டேண்டலோன் காட்டிலும், நான் ஸ்டேண்டலோனில் இருந்து வழங்கப்படும் அதிவேகத்தில் இருக்கும்.

what is true 5g check Details about Jio true 5G and its speed

Jio True 5G வேகம் எப்படி இருக்கு? எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

ஜியோ நிறுவனம் ‘நான் ஸ்டேண்டலோன்’ முறையை பின்பற்றுவதால் அதன் இணைய வேகம் மிக அதிகமாக இருக்கும் என்பதை குறிப்பிடும் வகையில் ‘True 5G’ என்று விளம்பரம் செய்கிறது. 
 
5ஜி சேவையை அனுபவிக்க புதிய சிம் தேவைப்படுமா ?

இந்தியாவில் 5ஜி சேவைக்கென தனியாக சிம் கார்டுகளை வாங்க தேவையில்லை என பெரும்பாலான நெட்வொர்க் நிறுவனங்களும் கூறியுள்ளன. இதே போல, ஜியோவும் 5ஜியை 4ஜி சிம்மில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.

5G இருந்தும் பிரயோஜனம் இல்லை.. குமுறும் iPhone வாடிக்கையாளர்கள்.. Airtel விளக்கம்!
 
4ஜிக்கும் 5ஜிக்கும்  உள்ள வித்தியாசம் என்ன ?

5ஜியைப் பொறுத்தவரையில் அதிகப்படியாக ஒரு நொடிக்கு ஒரு ஜிபி வரை இணைய வேகம் செயல்படும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. அதாவது, தற்போதுள்ள 4ஜி வேகத்தை  விட 5 மடங்கு அதிகமாக கிடைக்கும் என கூறி உள்ளது. அறிமுகத்தின் போது 4ஜியை இலவசமாக வழங்கியதை போலவே, 5ஜி சேவையையும் தற்சமயத்திற்கு 4ஜி கட்டணத்திலேயே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மும்பை , டெல்லி, கொல்கத்தா, வாரணாசி போன்ற நான்கு நகரங்களில் வழங்கி வருகின்றது. விரைவில் 5ஜி சேவைக்கான கட்டணங்கள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios