பட்ஜெட் விலை; 3D டிஸ்பிளே; சூப்பர் கேமரா: 'போகோ எக்ஸ் 7' சிறப்பம்சங்கள் என்னென்ன?
போகோ எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் அண்மையில் அறிமுமான நிலையில், இந்த போனின் சிறப்பம்சங்கள், விலை குறித்து விரிவாக பார்க்கலாம்.
போகோ எக்ஸ் 7
போகோ நிறுவனம் அண்மையில் போகோ எக்ஸ் 7 (POCO X7) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த மாடலின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். சூப்பர் பேட்டரி ஆயுளுடன் மல்டிமீடியா மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனை நாடுபவர்களுக்கு POCO X7 ஒரு சிறந்த தேர்வாகும்.
3D டிஸ்பிளே
இந்த போன் 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 1,220 x 2,712p தெளிவுத்திறன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளே HDR10 சான்றிதழ் பெற்றது. டிஸ்பிளே 3,000 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டதாக உள்ளது. 3D வளைந்த டிஸ்ப்ளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு உள்ளது.
என்னென்ன கேமரா?
POCO X7 5G மாடலில் OIS மற்றும் EIS ஆதரவுடன் கூடிய 50MP Sony LYT 600 முதன்மை கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் கேமரா உள்ளது. முன்பக்கத்தில், வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபிக்களுக்கு 20MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் உள்ள கேமராக்கள் நல்ல வண்ண துல்லியம் மற்றும் கூர்மையுடன் சிறந்த படங்களை எடுக்க உதவுகிறது. மேலும் இருட்டான இடங்களிலும் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடிகிறது. இதேபோல் முன் கேமராவும் தெளிவான, தரமான செல்ஃபி புகைப்படங்களை எடுக்க சிறந்ததாக உள்ளது.
செயல்திறன் மற்றும் மென்பொருள்
போகோ எக்ஸ் 7 போனை மாடலில் சக்திவாய்ந்த MediaTek Dimensity 7300 Ultra சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8GB வரை LPDDR4X RAM மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. போகோ போன்கள் பொதுவாக அவற்றின் செயல்திறன் கவனம் செலுத்துவதற்கு பெயர் பெற்றவை. அதே போல் இந்த மாடலிலும் நல்ல செயல்திறன் உள்ளது. இதனால் வீடியோக்கள், கேம்கள் தங்கு தடையின்றி பயன்படுத்த முடியும். போகோ மாடல் மூன்று ஆண்டுகளுக்கு OS அப்டேட்களுக்கு உறுதியளிக்கிறது.
பேட்டரி மற்றும் சார்ஜிங்
போகோ எக்ஸ் 7 மாடலில் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. பேட்டரி அளவு மேம்படுத்தப்பட்டதாக இருந்தாலும், போகோ எக்ஸ் 6 மாடலில் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதி இருந்த நிலையில், இதில் 45W சார்ஜிங் சப்போர்ட்டே உள்ளது. ஆனாலும் பேட்டரி சிறந்த செயல் திறன் கொடுக்கிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒருநாள் முழுவதும் பயன்படுத்த முடியும். 20-100 சதவீதத்திலிருந்து சார்ஜ் செய்ய தோராயமாக 50 நிமிடங்கள் ஆகிறது.
விலை என்ன?
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் போகோ போன்கள் நல்ல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இந்த போன் ஒரு வலுவான, நன்கு வடிவமைக்கப்பட்ட சேசிஸில் வருகிறது. மேலும் ஒரு உயர்மட்ட டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த மல்டிமீடியா அனுபவத்தை வழங்குகிறது. பகல் நேரத்தில் சிறப்பாக புகைப்படங்கள் எடுகக் உதவும் நல்ல கேமரா செயல்திறனை வழங்குகிறது. பேட்டரியும் நல்ல செயல்திறனை கொண்டுள்ளது. போகோ எக்ஸ் 7 போன் மாடலின் விலை ரூ.21,999 ஆகும்.