டெல்லியில் 2வது ஆப்பிள் ஸ்டோர் திறப்பு! அதிகாலையிலேயே திரண்ட ஐபோன் ரசிகர்கள்!
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது விற்பனையகத்தை அந்த நிறுவனத்தின் சிஓஇ டிம் குக் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இந்த ஸ்டோரில் 15 மொழிகளைப் பேசும் 70 பேர் பணிபுரிவார்கள்.
இந்தியாவின் இரண்டாவது ஆப்பிள் ஸ்டோரை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தலைநகர் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார். இதற்காக வியாழன் அதிகாலை முதலே டெல்லியின் செலக்ட் சிட்டிவாக் மாலில் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். காலை 10 மணியளவில் அங்கு வந்த டிம் குக் வாடிக்கையாளர்களை வரவேற்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தெற்கு தில்லியில் அமைந்துள்ள ஆப்பிள் சாகெட் ஸ்டோர் டெல்லியின் பல நுழைவுவாயில்களின் பாணியில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், செவ்வாய்க்கிழமை மும்பையில் திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோரை விட இந்த டெல்லி ஆப்பிள் ஸ்டோர் சிறியதுதான்.
மெட்டாவில் மீண்டும் ஆட்குறைப்பு! பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் ஊழியர்கள் கவலை
டெல்லியில் உள்ள ஆப்பிள் சாகெட் ஸ்டோர் மும்பை ஸ்டோரின் அளவில் பாதியாக ஆகும். நிறுவனத்தின் மொத்த விற்பனையில் ஒரு பகுதியை இந்த கடையின் வாடகைக்காகச் செலுத்த வேண்டியிருக்கும். மாதத்திற்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தும் கூறப்படுகிறது.
இந்த டெல்லி ஆப்பிள் ஸ்டோரில் 70 ஊழியர்களுக்கு மேல் வேலை பார்க்க உள்ளனர். அவர்கள் இந்தியாவின் 18 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் 15 மொழிகளுக்கு மேல் பேசக்கூடியவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் தொடங்கப்பட்டுள்ள ஆப்பிள் ஸ்டோரில் 20 மொழிகளில் பேச்சக்கூடிய 100 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆப்பிள் ஸ்டோர் திறப்புக்காக இந்தியா வந்துள்ள சிஇஓ டிம் குக் உலகின் தனது பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் உள்ள ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம் விரைவில் 2 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று டிம் குக் கூறியதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்றே சொன்னார் புத்தர்! முதல் பௌத்த மாநாட்டைத் தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி
இந்தச் சந்திப்பு பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் மோடியின் அன்பான வரவேற்புக்கு நன்றி கூறியதுடன், எதிர்காலத்தில் இந்தியாவில் கல்வி, சுற்றுச்சூழல் முதலிய துறைகளில் முதலீடு செய்ய இருப்பதாவும் கூறியுள்ளார். டிக் குக்கின் ட்வீட்டுக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "இந்தியாவில் தொழில்நுட்பத்தால் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களைப் பற்றியும் இன்னும் பல்வேறு விஷயங்களைக் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் குறிப்பிட்டார்.
2016ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியா வந்திருக்கும் டிம் குக் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
Google Pixel Fold: கூகுள் பிக்சல் ஃபோல்டு மொபைல் எப்போ ரிலீஸ்? விலை விவரம்...