அடித்தது அதிர்ஷ்டம்....!!! வெறும் 24  ரூபாயில் ஒரு மாதம் டேட்டா......!!!

vodafone 24-rupees-offer


அடித்தது அதிர்ஷ்டம் வெறும் 24  ரூபாயில் ஒரு மாதம் டேட்டா......!!!

ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து, தற்போது வோடபோன் புதிய  சலுகையை  தொடங்கியுள்ளது.

ஜியோவின்  அன்லிமிடெட் சலுகையை  மேலும் மூன்று மாதங்களுக்கு   நீட்டித்து நேற்று அறிவிப்பை  வெளியிட்டார்  முகேஷ் அம்பானி.

இந்நிலையில்,  ஜியோவிற்கு  போட்டியாக , தற்போது வோடபோன் , “படா டேட்டா சோட்டா ப்ரைஸ்” என்ற  புது  சலுகையை  அறிவித்தது.

அதன்படி,  வெறும் 24  ரூபாயில், ஒரு மாதத்திற்கு  டேட்டா வை  பயன்படுத்த  முடியும்.

சிறப்பு :

இதுவரை   இன்டெர்நெட்  வசதியை  பயன்படுத்தாதவர்கள் கூட , இனி  பயன்படுத்த தூண்டும்  விதமாக , மிக   குறைந்த  கட்டணமாக  24  ரூபாயில்  இந்த  சலுகையை   அறிவித்துள்ளது  வோடபோன்.

இந்த  சலுகையில்  அவ்வபோது  சிறு சிறு மாற்றங்கள்  இருக்கும்  என  தெரிகிறது.

சொல்லப்போனால்,  ரிலையன்ஸ்  ஜியோவின்  பக்கம்   வாடிக்கையாளர்கள்   செல்வதை  தடுக்கவே , இந்த  புது  யுக்தியை  பயன்படுத்துகிறது  வோடபோன்......!

தங்களிடம்  இருக்கும்  வாடிக்கையாளர்களை  தன் வசம்  வைத்துகொள்வதில் உறுதியாக  இருக்கிறது  வோடபோன்.....

இந்த தகவலை வோடபோன்  நிறுவன  உயரதிகாரி  சந்தீப்  கட்டாரியா தெரிவித்துள்ளார் ..

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios