விவோ T4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் தள்ளுபடி குறித்து பார்க்கலாம்.
Vivo T4 Pro 5G Launch: Rs.3,000 Discount Offer! புதிய விவோ T4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த முதல் விற்பனையின் போது, வாடிக்கையாளர்களுக்கு பல கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த 6,500mAh பேட்டரி மற்றும் 12GB வரை ரேம் போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
விவோ T4 ப்ரோ 5ஜி போனின் விலை என்ன?
இந்த சீரிஸில் ஏற்கனவே விவோ T4, வைவோ T4 லைட் மற்றும் விவோ T4x போன்ற மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வைவோ T4 ப்ரோ மூன்று வெவ்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதாவது 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.27,999க்கும், 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.29,999க்கும், 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜின் விலை ரூ.31,999க்கும் விற்பனையாகிறது.
ரூ.3,000 உடனடி தள்ளுபடி
இந்த முதல் விற்பனையின் போது விவோ T4 ப்ரோ ஸ்மார்போனை வாங்குபவர்கள் ரூ.3,000 உடனடி வங்கி தள்ளுபடி அல்லது ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம். விவோவின் அதிகாரபூர்வ ஸ்டோர் மட்டுமல்லாமல், பிளிப்கார்ட் தளத்திலும் இந்த போனை வாங்கலாம். இது நைட்ரோ ப்ளூ மற்றும் ப்ளேஸ் கோல்ட் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.
தரமான டிஸ்பிளே
விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1,500 நிட்ஸ் பிரைட்னஸ் உடன் கூடிய 6.77 இன்ச் AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 6,500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் போனில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும்.
கேமரா எப்படி?
பின்புறத்தில் 50MP பிரதான சென்சார் மற்றும் 50MP பெரிஸ்கோப் கேமரா கொண்ட டூயல் கேமரா அமைப்பு. முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32MP கேமரா வழங்கப்பட்டுள்ளன. மேலும் IP68/IP69 பாதுகாப்புத் தரம், திரைக்கு அடியில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஃபன்டச்ஓஎஸ் மற்றும் பல AI அம்சங்கள் விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போனில் நிறைந்துள்ளன.
