செயலிழந்த இதயத்தை  உயிரூட்ட ஸ்டெம் செல் : அறிவியலின் அடுத்தக்கட்ட  வளர்ச்சி

uses of-stem-cells

இதயத்தை  உயிரூட்ட ஸ்டெம் செல் : அறிவியலின் அடுத்தக்கட்ட  வளர்ச்சி

மருத்துவ  உலகத்தில்  ஸ்டெம் செல்லின் வளர்ச்சி  அதி முக்கியத்துவம்  வாய்ந்ததாக  உள்ளது.

ஸ்டெம் செல்  எங்கு உருவாகிறது ...?

நம் உடலில் உள்ள ஸ்டெம் செல்களின் பிறப்பிடம் அல்லது மூலமாக விளங்குவது ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையாகும்.அதாவது ,

ஹேமடோபோயடிக் ஸ்டெம் செல்கள் (HSC) மற்றும்

மெசன்கைமல் ஸ்டெம்செல்கள் (MSC)  என்ற  இரு  வகையில்  ஸ்டெம்  செல்கள்  உருவாகிறது.

ஸ்டெம் செல்கள் எப்படி  பயன்படுகிறது ?

செயல் இழந்த  மனித  உறுப்புகளை, மீண்டும் செயல்பட தூண்டும்  வகையில் ,  அதன் செல்  மற்றும்  திசுக்களை மறு உற்பத்தி    செய்வதற்கு ஸ்டெம்  செல்  முக்கிய  காரணியாக  உள்ளது. இதன் மூலம், செயலிழந்த மனித உறுப்புகளை மீண்டும்  செயல் பட வைக்க  முடியும்  என்பது குறிபிடத்தக்கது.

உதாரணம் :மனித இதயம்

மனிதனின் ஸ்டெம் செல்லில் இருந்து கார்டியாக் ப்ரோஜெனிடர் செல்களை பிரித்தெடுத்து அதனை பல்வேறு ரசானய மாறுதல்களுக்கு உட்படுத்தி, எபிகார்டியம் செல்களை  முதலில்  உருவாகுகின்றனர்.இந்த செல்கள் மனித இதயத்தின் வெளிப்புற படலமாக உள்ளது.  ஸ்டெம் செல்  மூலமாக தேவையான  செல்களை  பிரித்தெடுத்து  அதன்  மூலம் , மனித உறுப்புகளை செயல் பட வைக்க முடியும்  என  மருத்துவ  விஞ்ஞானம்  தெரிவிக்கிறது.  

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios