Asianet News TamilAsianet News Tamil

Russia-Ukraine crisis : இதை மட்டும் செய்யுங்க - போர் சூழலில் டிம் குக்கிற்கு கடிதம் எழுதிய உக்ரைன் அமைச்சர்

போர் பதற்ற சூழலில் உக்ரைன் தொழில்நுட்ப மந்திரி ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Ukraine tech minister appeals to Tim Cook to block App Store access in Russia
Author
Tamil Nadu, First Published Feb 26, 2022, 10:45 AM IST

உக்ரைன் ரஷ்யா இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனில் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. இதனால் அந்நாடு முழுவக்க குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. இந்த நிலையில், உக்ரைன் துணை பிரதமர் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி மிகாலியோ ஃபெடரோவ் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் ரஷ்ய ஃபெடரேஷனில் ஆப்பிள் சேவைகள் வழங்குவதை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

"உக்ரைனை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவில் ஆப்பிள் சேவைகள் மற்றும் சாதனங்கள் விற்பனை செய்வதை ஆப்பிள் நிறுத்த வேண்டும். ஆப் ஸ்டோர் சேவையையும் ரத்து செய்ய  வேண்டும். இந்த நடவடிக்கை ரஷ்யா மக்கள் மற்றும் இளைஞர்களை வெட்கக்கேடான ராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்த ஊக்குவிக்கும்," என தொழில்நுட்ப மந்திரி டிம் குக்கிற்கு எழுதி இருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். 

 

இதே தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்டிலும் பதிவிட்டு இருக்கிறார். இவரது பதிவினை ஐ.நா.-வுக்கான முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் மற்றும் சட்ட படிப்புகளுக்கான பேராசிரியர் டேவிட் கேய் ரி-டுவிட் செய்து இருக்கிறார். ஆப் ஸ்டோர் சேவையை நிறுத்துவதன் மூலம் அவர்களின் தகவல் தொடர்பை துண்டிக்க முடியும் என அவர் நம்புகிறார். 

முன்னதாக உக்ரைனில் நடைபெற்று வரும் சூழல் குறித்து தான் மிகவும் வருந்துவதாக டிம் குக் தெரிவித்து இருந்தார். மேலும் ஆப்பிள் தொடர்ந்து மனித நேயமிக்க முயற்சிகளை தொடர்ந்து வழங்கும் என அவர் தெரிவித்தார். எனினும், உக்ரைன் தொழில்நுட்ப மந்திரியின் கோரிக்கைக்கு டிம் குக் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. 

டிம் குக் மட்டுமின்றி தொழில்நுட்ப துறையை சேர்ந்த முக்கிய தலைவர்களும் ரஷ்யாவின் போர் நடவடிக்கை குறித்து தங்களின் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios