Ukraine Russia Crisis: ரஷ்யாவுக்கு எதிர்ப்பு- அதிரடி நடவடிக்கை எடுத்த கேம் நிறுவனம்!
Ukraine Russia Crisis : உக்ரைன் நாட்டை ஆக்கிரமித்து சண்டையிட்டு வரும் ரஷ்யாவுக்கு எதிராக கேம் நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
எலெக்டிரானிக்ஸ் ஆர்ட்ஸ் (EA) முன்னணி கேம் தயாரிப்பு நிறுவனம் ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ரஷ்யா நாட்டு தேசிய அணி மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அனைத்து கால்பந்து கிளப்களுக்கு FIFA 22 கேமில் EA தடை செய்துள்ளது. உக்ரைனை ஆக்கிமரித்து வருவதற்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களின் எதிர்ப்பை கடுமையான நடவடிக்கைகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றன.
அதன்படி EA மேற்கொண்டுள்ள நடவடிக்கையை அடுத்து ரஷ்யா பிளேயர்கள் FIFA 22-இல் இருந்து நீக்கப்படுவர். தற்போது ரஷ்யாலின் தேசிய கால்பந்து அணியை சேர்ந்த ஐந்து வீரர்கள் மட்டுமே ரஷ்ய பிரீமியர் லீகிற்கு வெளியே விளையாடி வருகின்றனர். இத்துடன் தேசிய ஹாக்கி லீக் சார்ந்து EA உருவாக்கி இருக்கும் NHL 22 கேமில் இருந்தும் ரஷ்ய அணிகள் நீக்கப்படுவதாக EA நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
முன்னதாக சர்வதேச கால்பந்து மற்றும் NHL தொடர்களில் இருந்து ரஷ்யாவின் தேசிய அணி மற்றும் கிளப்களை FIFA இடைநீக்கம் செய்ததை அடுத்து EA இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எதிர்காலத்தில் NHL போட்டிகளை நடத்த ஒருபோதும் ரஷஷ்யாவில் இடம் தேடாது என FIFA அறிவித்து இருக்கிறது.
இதுதவிர ஆப்பிள் முதல் நைக் முதல் பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களின் வியாபாரம் மற்றும் ஏற்றுமதி உள்ளிட்டவைகளை நிறுத்தி இருக்கின்றன. இதுமட்டுமின்றி பல்வேறு மேற்கத்திய நாடுகளும் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.