பெருத்த எதிர்பார்ப்புக்கிடையில் விற்பனைக்கு வந்தது Htc U ULTRA smartphone
இந்தியாவை பொறுத்தவரையில், ஸ்மார்ட் போன் விற்பனை எப்பொழுதும் அதிகம். சாதாரண மக்களும், மிக சாதாரணமாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்.
ஹெச்டிசி நிறுவனம்
ஸ்மார்ட் போன் தயாரிப்பில், மிக பிரபலமான ஹெச்டிசி நிறுவனத்தின், யு அல்ட்ரா ஸ்மார்ட் போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
எப்பொழுது விற்பனை ?
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு, இந்த ஃபோன் விற்பனை தொடங்குவதாக, ஹெச்டிசி கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை
இந்த ஸ்மார்ட் போனின் தொடக்க விலை ரூ.54,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் :
5.7 இன்ச் எல்சிடி தொடுதிரை வசதி,
ஆன்ட்ராய்ட் 7.0 நவ்கட் மென்பொருள் இயங்குதிறன்,
4ஜி ரேம், 64 ஜிபி தொடங்கி, தேவைக்கேற்ப நீட்டிக்கும் வசதியுடன் கூடிய நினைவுத் திறன்,
கேமரா
முன்பக்க கேமரா : 16 எம்பி கேமிராவும்,
பின்பக்க கேமரா : 12 அல்ட்ரா பிக்சல்
குறிப்பு :
இந்த ஸ்மார்ட் போன் பொறுத்தவரையில் 2 தொடுதிரைகள கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஸ்மார்ட் போன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.