Twitter Views: யூடியூப்பைப் போலவே டுவிட்டரிலும் இந்த அம்சம் வந்து விட்டது! எலான் மஸ்க் அறிவிப்பு!
ரீட்வீட்கள் உள்ளிட்ட ஆப்ஷன்கள் இருக்கும் வரிசையில், இனி உங்கள் டுவீட்களை எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என்பதும் காட்டப்படும் வகையில் புதிய அப்டேட் வரவுள்ளது.
டுவிட்டர் தளத்தில் Views எண்ணிக்கை என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனர்கள் தங்கள் ட்வீட்களின் Views பற்றி மேலும் அறிய உதவுகிறது. அதாவது, புதிய ட்விட்டர் வியூ கவுண்ட் அம்சமானது, உங்கள் ட்வீட் எத்தனை முறை பார்க்கப்பட்டது என்பதைப் பார்க்க அனுமதிக்கிறது. இந்த அம்சம் யூடியூப் வீடியோக்களில் காட்டப்படும் Views எண்ணிக்கையைப் போலவே இருக்கும்.
இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்கள் ட்வீட் தன்மையை நன்கு புரிந்துகொள்ள உதவும். இது குறித்து புதிய ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதன்படி, 90% ட்விட்டர் பயனர்கள் ட்வீட் செய்யவோ, பதிலளிக்கவோ அல்லது விரும்பவோ இல்லாமல் உள்ளனர். வெறும் ட்வீட்களைப் படித்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது உங்கள் ட்வீட் எத்தனை முறை படிக்கப்பட்டது என்பது உதவிகரமாக இருக்கும் என்று தெரிகிறது.
எலான் மஸ்க் பதிவிட்ட ட்வீட்டில் கூறியிருப்பதாவது, "ட்விட்டர் Views எண்ணிக்கையை வெளியிடுகிறது, எனவே ஒரு ட்வீட் எத்தனை முறை பார்க்கப்பட்டது என்பதை நீங்கள் பார்க்கலாம்! வீடியோவிற்கு இது இயல்பானது. 90% க்கும் மேற்பட்ட ட்விட்டர் பயனர்கள் ட்வீட்களை படிப்பதால், இந்த ட்விட்டர் எந்தளவு உயிர்ப்புடன் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது, ஆனால் அவ்வாறு ட்வீட்களை பார்த்துவிட்டு மட்டும் பயனர்கள் செல்வது என்பது பொதுவான செயல்கள். எனவே, ட்வீட் செய்யவோ, பதிலளிக்கவோ அல்லது லைக் செய்யவோ வேண்டாம்” இவ்வாறு எலோன் மஸ்க் தனது ட்வீட்டில் கூறியிருந்தார்.
ரீட்வீட்கள், Quotes Tweets, லைக்ஸ் ஆகிய வரிசையில் இனி Views என்ற ஒரு புதிய ஆப்ஷனும் காட்டப்படும். புதிய ட்வீட்களில் மட்டுமே வியூ கவுண்ட் வசதி உள்ளது. கடந்த சில வாரங்களில், மஸ்க் ட்விட்டரில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.