ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்களை மார்ச் 15 முதல் அலுவலகம் வந்கு பணி செய்ய கேட்டுக் கொண்டு வருகிறது.

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உலகம் முழுக்க ட்விட்டர் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவித்து இருக்கிறார். எனினும், ஊழியர்கள் விரும்பினால் வீட்டில் இருந்தும் பணியாற்றலாம் என அவர் தெரிவித்தார். 

ட்விட்டர் போன்றே கூகுள் நிறுவனமும் ஏப்ரல் மாத துவக்கத்தில் சிலிகான் வேலி அலலுவலகங்களை திறக்க தயாராகி வருகிறது. மேலும் ஊழியர்களையும் அலுவலகம் வர ஆயத்தமாக கூறி வருகிறது. மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற போதும், வாரத்தில் சில நாட்கள் மட்டும் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என கூகுள் நிறுவனமும் தெரிவித்து உள்ளது. 

முன்னதாக கொரோனா தொற்று கோரத்தாண்டவம் காரணமாக அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு, ஊழிடர்களில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்து பணியாற்ற துவங்கினர். தற்போது வைரஸ் தொற்று குறைந்து வரும் சூழலில் பல நிறுவனங்கள் மீண்டும் அலுவலகங்களை திறந்து வருகின்றன. 

Scroll to load tweet…

"வியாபார ரீதியிலான பயணங்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க ட்விட்டர் அலுவலகங்கள் மார்ச் 15 ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. எங்கிருந்து சிறப்பாக பணியாற்ற விரும்புகிறீர்களோ அங்கிருந்தே பணியாற்றலாம். இது வீட்டில் இருந்து பணியாற்றுவதையும் குறிக்கும்," என பராக் அகர்வால் தெரிவித்தார்.