Asianet News TamilAsianet News Tamil

டுவிட்டரில் Tweet Edit அம்சம் அமலுக்கு வந்தது! பயன்படுத்துவது எப்படி?

டுவிட்டரில் ட்வீட்டை எடிட் செய்யும் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி ஒரு டுவிட் செய்த பிறகு, அது தவறாக இருந்தால் உடனே திருத்திக்கொள்ளலாம். இதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இங்கு காணலாம்.

Twitter rollout Edit Tweet option in blue tick subscription
Author
First Published Oct 4, 2022, 12:40 PM IST

டுவிட்டரைப் பொறுத்தவரையில்இதற்கு முன் ட்வீட்களில் ஏதேனும் பிழை ஏற்பட்டால் அதை டெலிட் மட்டுமே செய்ய முடியும். ஆனால் இப்போது எடிட் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் ட்வீட்டில் ஏதேனும் தவறு இருந்தாலோ, எழுத்துப்பிழை பொருள் பிழை எதுவாயினும் நாம் எடிட் செய்து கொள்ளலாம்.

இந்த வசதி முதலில் டிவிட்டர் ப்ளூ பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படியே, தற்போது இந்த வசதி ப்ளூ டிக் பயனர்களுக்கு கிடைத்துள்ளது. ட்விட்டர் ப்ளூ எடிட் வசதியானது அமெரிக்கா,  கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இதனைப் பயன்படுத்த ஒரு மாதத்திற்கு 4.99 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 407.12 ரூபாய் செலுத்தவேண்டும்.

இந்த வசதி இந்தியாவில் உபயோகத்திற்கு வரவில்லை. சோதனை அளவில் மட்டுமே உள்ளது.  இதை உறுதிபடுத்தும் வகையில், டுவிட்டர் நிறுவனமே ஒரு ட்வீட் செய்துள்ளது. 

மேலும், இதில் நாம் யூடியூப் மற்றும் இன்ஸ்டா வீடியோக்களையும் பார்க்கமுடியும். இதைத்தவிர உலகெங்கும் மிகப் பிரபலமாக இருந்த டிக் டாக் செயலியைப் போலவே நாம் இதில் வீடியோக்களை முழு ஸ்க்ரீனில் காணலாம் மேலும் சிறப்பாக நாம் எடிட் செய்தவற்றை ஃபாலோவர்ஸ் எடிட் ஹிஸ்டரி மூலமாக பார்த்துக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

குறிப்பாக வீடியோக்களை விளம்பரங்களே இல்லாமல் தங்கு தடையின்றி பார்த்துக் கொள்ளும் வசதியும் இருப்பதாக கூறப்படுகிறது. டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மாற்றங்களுக்கு, பயனர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு உள்ளது.

Airtel, Jio போல், BSNL நெட்வொர்க்கிலும் 5G சேவை தேதி அறிவிப்பு!

ட்விட்டரின் எடிட் அம்சம் எவ்வாறு செயல்படுகிறது?

முதலில், பயனர்கள் தங்களது ட்வீட்களைத் திருத்த, Twitter Blue சந்தாவை வைத்திருக்க வேண்டும்.
ஒரு ட்வீட்டை பதிவு செய்த 30 நிமிடங்களுக்குள், பயனர்கள் அதைத் திருத்துவதற்கான ஆப்ஷனை பெறுவார்கள்.
திருத்தப்பட்ட ட்வீட்களில் ஒரு ஐகான், டைம் ஸ்டாம்ப், ட்வீட் எடிட் செய்யப்பட்டதற்கான அறிகுறி ஆகியவை இருக்கும். இதனை வாசகர்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் ஒரு லேபிள் இருக்கும்.
அனைத்து பயனர்களும் ஒரு ட்வீட் எடிட் செய்யப்பட்ட வரலாற்றைப் பார்க்க முடியும்,  ட்விட்டர் ப்ளூவின் சந்தாதாரர்கள் இப்போது ட்வீட்களை ஒரு நிமிடம் வரை நிறுத்தி வைக்கும் அம்சத்தைப் பயன்படுத்தலாம், இதனால் பயனர்கள் அவற்றைப் பார்ப்பதற்குள், "செயல்தவிர்க்கலாம்" (Undo). மற்ற பிரீமியம் சேவைகளைப் போல Twitter Blue விளம்பரம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios