ட்விட்டர் நிறுவனம் அதிரடி... போலி கணக்குகள் முடக்கம்..!
போலி ட்விட்டர் கணக்குகள் மூலம் தவறான செய்திகளை வழங்கி வந்த ஆயிரக்கணக்கான கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கியுள்ளது.
உலக அளவில் தவறான தகவல்களை பரப்பியட் குற்றசாட்டில் போலி கணக்குகள் மீது ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. உலக அளவில் போலி செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி வந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன் காஷ்மீர் தொடர்பாக ஆட்சேபகரமான கருத்துகள் ட்விட்டர் மூலம் பரப்பப்படுவதற்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து 333 பாகிஸ்தானியப் பயனர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.
செய்தி நிறுவனங்கள், விஐபிகள், அரசு அலுவலகங்கள் முதல் சாமானியன் வரை ட்விட்டர் அக்கவுண்டை பயன்படுத்தி தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். சிலர் போலி ட்விட்டர் கணக்குகளை ஆரம்பித்து அவதூறு, வதந்தி, போலி செய்திகளை பரப்பி வருகின்றனர். உலகம் முழுவதும் மேலும் சில அக்கவுண்ட்கள் முடக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.