கிராஷ் டெஸ்டில் அசத்திய டொயோட்டா கார்... அதிர்ச்சி கொடுத்த ஹூண்டாய்..!

குளோபல் NCAP புது விதிகளை இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலுக்கு கொண்டு வர முடிவு செய்து இருக்கிறது.

Toyota Urban Cruiser Gets Four-Star Rating During Indian Crash Test Results

குளோபல் NCAP 2022 #SaferCarsForIndia கிராஷ் டெஸ்ட் முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. கிராஷ் டெஸ்ட் முடிவுகளில் ஹூண்டாய் அதிர்ச்சி அளிக்கும் முடிவுகளை பெற்று உள்ளது. 

ஹூண்டாய் நிறுவனத்தின் i20 மற்றும் கிரெட்டா மாடல்கள் அடல்ட் மற்றும் சைல்டு ஆகுபண்ட் ப்ரோடெக்‌ஷனில் மூன்று நட்சத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் குரூயிசர் மாடல் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. 

புது விதிமுறைகள்:

#SaferCarsForIndia திட்டத்திற்காக குளோபல் NCAP தற்போது முன்புற கிராஷ் ப்ரோடெக்‌ஷனை கருத்தில் எடுத்துக் கொள்கிறது. இதில் சைடு இம்பேக்ட், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பெடஸ்ட்ரியன் ப்ரோடெக்‌ஷன் உள்ளிட்டவைகளை எடுத்துக் கொள்ளாது. இவை அனைத்தும் குளோபல் NCAP பரிசோதனைகளில் பங்கேற்க புது தேவைகளாக வகுக்கப்பட்டு உள்ளன. 

"இந்த கார்கள் பெற்று இருக்கும் ஒட்டுமொத்த முடிவுகள் பார்க்க ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தாலும், ஹூண்டாய் மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்கள் எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், சைடு பாடி மற்றும் ஹெட் ப்ரோடெக்‌ஷன் ஏர்பேக் போன்ற பாதுகாப்பு அமைப்புகளை கார்களில் வைக்காமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இவை அனைத்தும் இந்தியாவில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளன," என்று குளோபல் NCAP  பொது செலாளர் அல்ஜாண்ட்ரோ ஃபௌரஸ் தெரிவித்தார்.

Toyota Urban Cruiser Gets Four-Star Rating During Indian Crash Test Results

கட்டாய பாதுகாப்பு அம்சங்கள்:

"இதன் காரணமாகவே சைடு இம்பேக்ட் ப்ரோடெக்‌ஷனை அதிகிப்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய அரசின் புது கட்டுப்பாடுகளை குளோபல் NCAP வரவேற்கிறது. குளோபல் NCAP புது விதிகளை இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலுக்கு கொண்டு வர முடிவு செய்து இருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்கும் போது தான் ரேட்டிங் வழிமுறையின் போது நல்ல முடிவுகளை பெற முடியும்," என அவர் மேலும் தெரிவித்தார். 

"கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடல்களின் பாதுகாப்பு ரேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை உற்று நோக்கி வருகிறோம். குளோபல் NCAP பாதுகாப்பு சவாலுக்கு ஏற்ப இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் வளர்ந்து வருவது வரவேற்கக் கூடிய விஷயம் ஆகும். சர்வதேச நிறுவனங்களான டொயோட்டா மற்றும் ஹூண்டாய் உள்ளிட்டவை இவர்களை பின்பற்ற வேண்டும்," என ஜீரோ பவுன்டேஷனை சேர்ந்த நிர்வாக தலைவர் டேவிட் வார்ட் தெரிவித்தார். 

கிராஷ் டெஸ்ட்:

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் அதன் அடிப்படை பாதுகாப்பு அம்சங்களான இரண்டு முன்புற ஏர்பேக் மற்றும் ஏ.பி.எஸ். உடன் சோதனை செய்யப்பட்டது. இதில் ஓட்டுனரின் கால்கள் மற்றும் பாதம் உள்ளிட்டவைகளில் அதிக பாதிப்பு ஏற்படும் நிலையில் கிரெட்டா மாடல் உருவாக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ISOFIX ஆன்கரேஜ் மற்றும் 3 பாயிண்ட் பெல்ட்கள் பொருத்தப்படாதது குழந்தைகளுக்கான பாதுகாப்பு முடிவுகளை விளக்கும் வகையில் உள்ளது.

இத்தகைய புதிய மாடலில் 3 பாயிண்ட் பெல்ட்கள், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது ஆச்சர்யமூட்டும் வகையில் உள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் குரூயிசர் மாடலும் மிகவும் அடிப்படை பாதுகாப்பு அம்சங்களுடனேயே சோதனை செய்யப்பட்டது. இது பெரியவர்களுக்கு முறையான பாதுகாப்பை வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios