Asianet News TamilAsianet News Tamil

விரைவில் இந்தியா வரும் ஹைப்ரிட் கார்... அசத்தல் டீசர் வெளியிட்ட டொயோட்டா...!

புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் பெங்களூரு நகரில் செயல்பட்டு வரும் டொயோட்டா உற்பத்தி ஆலையில் உருவாக்கப்பட இருக்கிறது.

Toyota Hyryder Hybrid SUV Teased Ahead Of India Reveal
Author
India, First Published Jun 26, 2022, 11:29 AM IST

டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் சுசுகி நிறுவனத்துடனான கூட்டணியில் உருவாக்கப்பட்ட மாடல் என டொயோட்டா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய டொயோட்டா காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடல் ஹைரைடர் என்ற பெயரில் அறிமுகமாக இருக்கிறது. 

புது மாடலின் பெயரோடு டொயோட்டா நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. டீசர் படத்தில் காரின் முன்புறம் தெளிவாக காட்சி அளிக்கிறது. அதன்படி டொயோட்டா ஹைரைடர் மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லைட் டிசைன் வழங்கப்பட இருக்கிறது. தற்போது அறிமுகம் செய்யப்படும் பல்வேறு கார் மாடல்களில் இது வழக்கமான அம்சமாக மாறி விட்டது.  இத்துடன் எல்.இ.டி. டே டைம் ரன்னிங் லைட்கள் கிரிலின் மேல்புறத்தில் உள்ளது.

Toyota Hyryder Hybrid SUV Teased Ahead Of India Reveal

டிசைன் விவரங்கள்:

இந்த காரின் ஹெட்லேம்ப், முன்புற பம்ப்பரின் கீழ் புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. பம்ப்பரின் கீழ்புறம் பௌக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளது. இத்துடன் செண்ட்ரல் ஏர் டேம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த கார் டூயல் டோன் பெயிண்ட் ஃபினிஷ் கொண்டு இருக்கும் என தெரியவந்துள்ளது. 

புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் பெங்களூரு நகரில் செயல்பட்டு வரும் டொயோட்டா உற்பத்தி ஆலையில் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த காரின் சுசுகி பிராண்டு மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. 

முன்னதாக டொயோட்டா மற்றும் சுசுகி நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, சுசுகி நிறுவனத்தின் பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களை டொயோட்டா ரி-பிராண்டு செய்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இவை டொயோட்டா கிளான்சா, அர்பன் குரூயிசர் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களின் பேஸ்லிப்ட் வேரியண்ட்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios