செப்டம்பர் 7-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழும், இதனால் சந்திரன் கருஞ்சிவப்பு நிறமாகத் தோன்றும். இந்த அரிய நிகழ்வை இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் காணலாம்.

2025-ன் இரண்டாவது சந்திர கிரகணம் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இது முழு சந்திர கிரகணம் என்பதால், அந்த நேரத்தில் சந்திரன் கருஞ்சிவப்பு நிறத்தில் மாறும். இதை “ரத்த நிலா” என்றும் அழைக்கிறார்கள். இந்த மிக அரிய வானியல் நிகழ்வாக இது கருதப்படுகிறது.

இந்த கிரகணத்தை இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் காண முடியும். குறிப்பாக இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் இந்த வான அதிசயத்தை ரசிக்கலாம். வானிலை நல்ல நிலையில் இருந்தால், இது கண்களுக்கு ஒரு அழகான அனுபவமாக இருக்கும்.

சந்திர கிரகணம் எவ்வாறு உருவாகிறது?

பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் வந்துவிட்டால், சூரிய ஒளி சந்திரனை நேரடியாக அடையாது. ஆனால் முழு இருள் அல்லாமல், பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியை வளைத்து சிதறடிக்கிறது.

இந்தச் சிதறலில், நீலம், ஊதா போன்ற குறைந்த அலைநீள ஒளிகள் மறைந்து விடுகின்றன. அதே சமயம் சிவப்பு, ஆரஞ்சு போன்ற நீளமான அலைநீள ஒளி வளிமண்டலத்தைத் தாண்டி சந்திரனை அடைகிறது. இதனால், கிரகண நேரத்தில் சந்திரன் சிவப்பு நிறத்தில் ஒளிர்கிறான். இதுவே ‘ரத்த நிலா’ என்று தெரிகிறது.

சந்திர கிரகணம் தேதி

செப்டம்பர் 7 இரவு 8:58 மணிக்கு கிரகணம் தொடங்கும். இரவு 11:00 மணிக்கு முழு கிரகணம் ஆரம்பித்து, அடுத்த நாள் அதிகாலை 12:22 மணிவரை சுமார் 82 நிமிடங்கள் நீடிக்கும். முழு கிரகணம் செப்டம்பர் 8 அதிகாலை 2:25 மணிக்கு முடிவடையும்.

இந்த கிரகணத்தை ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளிலும் காணலாம். இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, லக்னோ, ஹைதராபாத், சண்டிகர் போன்ற முக்கிய நகரங்களில் வானிலை சாதகமாக இருந்தால் முழுமையாகக் காண வாய்ப்பு உள்ளது. கிடைக்கும்.

எப்படி பார்க்கலாம்?

சந்திர கிரகணத்தைப் பார்ப்பதற்கு சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை. சூரிய கிரகணத்தைப் போல பாதுகாப்பு கவசங்கள் தேவையில்லை; வெறும் கண்களால் பாதுகாப்பாக பார்க்கலாம். தொலைநோக்கி இருந்தால் இன்னும் அழகாகக் காண முடியும். நகரத்தின் வெளிச்சத்திலிருந்து விலகி திறந்தவெளியில் பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.