ரூ.10,000க்கு கீழ் உள்ள ஸ்மார்ட்போன்கள் 5G இணைப்பு, சிறந்த கேமரா, மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் போன்ற அம்சங்களை வழங்குகின்றன.
ரூ.10,000க்கு கீழ் நல்ல ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவரா நீங்கள்? உங்களுக்கான செய்திதான் இது. பட்ஜெட் விலையில் பல சக்திவாய்ந்த மொபைல்கள் கிடைக்கின்றன. 5G இணைப்பு, ஸ்மூத் டிஸ்ப்ளே, நல்ல கேமரா போன்ற பல பிரீமியம் அம்சங்கள் உடன் இப்போது குறைந்த விலையில் கிடைக்கிறது.
Samsung Galaxy F06 5G:
சாம்சங் நம்பகத்தன்மையுடன் கூடிய இந்த மொபைல் மாடல் 12 5G பேண்டுகளை ஆதரிக்கிறது. Dimensity 6300 பிராசசர், 50 MP டூயல் கேமரா ஆகியவை சிறந்த புகைப்படங்களை தருகின்றன. 5000 mAh பேட்டரி மற்றும் 25W வேகமான சார்ஜிங் மூலம் நாள் முழுவதும் எளிதாக பயன்படுத்தலாம்.
Redmi 14C 5G:
வேகம் மற்றும் ஸ்மூத் டிஸ்ப்ளே விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு இந்த மொபைல் ஆகும். Snapdragon 4 Gen 2 பிராசசர், 120Hz டிஸ்ப்ளே, விர்ச்சுவல் RAM சப்போர்ட் ஆகியவை மடித்தாலும் லேக் இல்லாமல் வேலை செய்கிறது. 50 MP கேமரா, வெளிச்சம் மாறினாலும் நல்ல படங்களை தருகிறது.
Poco M7:
கேமிங் மற்றும் கேமரா லவ்வரா நீங்கள்? அப்போது இதுதான் உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ். Snapdragon 4 Gen 2-ல் இயங்கினாலும், Sony IMX852 50 MP சென்சார் கொண்டு அதிக விவரங்களுடன் கூடிய புகைப்படங்களை எடுக்கிறது. 6.88 அங்குல 120Hz திரை, வீடியோவும் கேமிங்கும் சூப்பராக இருக்கும்.
Infinix Hot 50 5G:
நல்ல எண்டர்டெயின்மெண்ட்டை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு இந்த மொபைல். 6.7 அங்குல பெரிய திரை, 1 TB வரை மெமரி கார்டு சப்போர்ட், 33W வேக சார்ஜிங் கொண்ட 5000 mAh பேட்டரி வீடியோ, பாடல், ஆப்ஸ் அனைத்தையும் எளிதாக சேமிக்கலாம்.
Moto G35 5G:
கிளீன் சாப்ட்வேர் அனுபவம் விரும்புபவர்களுக்கு. Dimensity 6100+ பிராசசர், 50 MP கேமரா, சுத்தமான Android அனுபவத்துடன் வருகிறது. நீங்கள் நாள் தோறும் எளிதாகவும் ஸ்மூத்தாகவும் பயன்படுத்தலாம். மேற்கண்ட மொபைல்கள் ஸ்டைல், வேகம், ஸ்மார்ட் போன்ற பல்வேறு அம்சங்களுடன் குறைந்த விலையில் கிடைக்கிறது.
