CES 2026 CES 2026-ல் அறிமுகமான சிறந்த 5 ஸ்மார்ட் கிளாஸ் பற்றி இங்கே படியுங்கள். AI கேமரா முதல் விர்ச்சுவல் ஸ்கிரீன் வரை தொழில்நுட்ப உலகின் புதிய வரவுகள் இதோ.

ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்ப உலகின் புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு பறைசாற்றும் இடமாக CES (Consumer Electronics Show) கண்காட்சி திகழ்கிறது. கடந்த 2025-ம் ஆண்டைப் போலவே, இந்த ஆண்டு நடைபெற்ற CES 2026-லும் 'ஸ்மார்ட் கிளாஸ்கள்' (Smart Glasses) பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து அரங்கத்தையே அதிர வைத்துள்ளன. வெறும் சிறிய அப்டேட்கள் மட்டுமல்லாமல், நீண்ட பேட்டரி ஆயுள், பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் பயனுள்ள AI அம்சங்களுடன் இந்த புதிய தலைமுறை கண்ணாடிகள் களமிறங்கியுள்ளன.

தொழில்நுட்ப உலகின் புதிய ட்ரெண்ட்

இந்த ஆண்டு அறிமுகமான ஸ்மார்ட் கிளாஸ்கள், சாதாரண கண்ணாடிகளைப் போலவே எடை குறைவாகவும், அணிவதற்கு வசதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. சில மாடல்கள் XR (Extended Reality) தொழில்நுட்பத்துடன் விர்ச்சுவல் திரைகளை வழங்குகின்றன. மெட்டா ரே-பான் (Meta Ray-Ban) போன்ற சில மாடல்கள் கேமராக்கள், வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் ஸ்பீக்கர்களுடன் வந்தாலும், பார்ப்பதற்குச் சாதாரண கண்ணாடி போலவே இருப்பது இதன் சிறப்பு. இந்த ஆண்டு கண்காட்சியில் அனைவரையும் கவர்ந்த டாப் 5 ஸ்மார்ட் கிளாஸ்கள் எவை என்று பார்ப்போம்.

1. கேமர்களுக்கான கனவு கன்னி: Asus ROG Xreal R1

வீடியோ கேம் பிரியர்களுக்கு (Gamers) ஓர் அற்புதமான விருந்தாக வந்துள்ளது Asus ROG Xreal R1. இது உங்களுக்கு முன்னால் மிகப்பெரிய 171 இன்ச் விர்ச்சுவல் திரையை உருவாக்கும். அதுமட்டுமின்றி, XR சாதனங்களிலேயே முதல்முறையாக 240Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) இதில் வழங்கப்பட்டுள்ளது. 'ஆங்கர் மோட்' (Anchor Mode) வசதி இருப்பதால், நீங்கள் நகரும்போது கூட விர்ச்சுவல் திரை அசையாமல் நிலையாக இருக்கும். இது 2026-ன் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும்.

2. உங்கள் பர்சனல் அசிஸ்டென்ட்: XGIMI Memomind

XGIMI நிறுவனத்தின் Memomind கிளாஸ், லென்ஸிலேயே மைக்ரோ எல்இடி (MicroLED) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. பார்ப்பதற்குச் சாதாரண கண்ணாடி போலத் தெரிந்தாலும், இதில் நீங்கள் செய்திகளைப் படிக்கலாம், AI உடன் சாட் செய்யலாம், மேப் (Map) பார்க்கலாம். சந்தையில் உள்ள மற்ற XR கிளாஸ்களை விட இதன் விலை குறைவு என்பது கூடுதல் சிறப்பு.

3. தியேட்டர் அனுபவம்: Xreal 1S

விலை உயர்ந்த கண்ணாடிகளுக்குப் போட்டியாக, குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் வந்துள்ளது Xreal 1S. இதன் முந்தைய மாடலை விட இது அதிக பார்வை விரிவையும் (Field of View), கூர்மையான டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சம் 'Real3D' தொழில்நுட்பம் ஆகும். இது சாதாரண 2D வீடியோக்களையும் 3D ஆக மாற்றி, ஒரு தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவத்தைத் தரும்.

4. எடை குறைவு ஆனால் பவர் அதிகம்: RayNeo Air 4 Pro

அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தது RayNeo Air 4 Pro. HDR10 சப்போர்ட் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட் கிளாஸ் இதுதான். வெறும் 76 கிராம் எடை கொண்ட இந்த கண்ணாடியில் 1200 நிட்ஸ் பிரகாசம் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. பேங் & ஒலிஃப்சென் (Bang & Olufsen) ஆடியோ தொழில்நுட்பம் இருப்பதால், இதில் படம் பார்ப்பதும் கேம் விளையாடுவதும் ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும்.

5. பட்ஜெட் விலையில் ஒரு மிரட்டல்: Rokid AI Glasses Style

மெட்டா ரே-பான் கண்ணாடிகளுக்கு ஒரு சிறந்த மாற்றாக, பட்ஜெட் விலையில் வந்துள்ளது Rokid AI Glasses Style. இது மிகவும் லேசானது மற்றும் நீண்ட நேரம் அணிவதற்கு ஏற்றது. இதில் கேமரா, மைக் மற்றும் ஓபன்-இயர் ஸ்பீக்கர்கள் உள்ளன. 12 மணிநேரம் வரை பேட்டரி தாங்கும் திறன் கொண்ட இது, ஸ்மார்ட் கிளாஸ் உலகிற்குப் புதிதாக வருபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.