Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் டாப் 5 பாதுகாப்பான கார்கள்... உங்க கார் இருக்கானு பாருங்க...

வாடிக்கையாளர்கள் மத்தியில் கார் மாடல்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

Top 5 Safest Cars In India June 2022
Author
India, First Published Jun 25, 2022, 6:14 PM IST

மஹிந்திரா நிறுவனம் குளோபல் NCAP-இடம் இருந்து சேஃபர் சாய்ஸ் விருதை சமீபத்தில் தான் வென்றது. இந்த செய்தி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தீயாக பரவி வருகிறது. மேலும் இந்திய சந்தையில் பாதுகாப்பான கார் மாடல்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் கார் மாடல்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

அந்த வகையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் கார்களில் டாப் 5 பாதுகாப்பான கார் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம். இவை அனைத்தும் இந்திய கார் உற்பத்தியாளர்களின் மாடல்கள் ஆகும்.

Top 5 Safest Cars In India June 2022

டாடா பன்ச்:

இந்திய சந்தையில் பாதுகாப்புக்கு  ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்ற கார் மாடலாக டாடா பன்ச் இருக்கிறது. இந்த மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் காரில் பயணிக்கும் பெரியவர்கள் பாதுகாப்புக்கு 17-க்கு 16.45 புள்ளிகளை பெற்று அசத்தி இருந்தது.

மஹிந்திரா XUV300:

மஹிந்திரா நிறுவனத்தின் XUV300 மாடல் இந்திய சந்தையில் கிடைக்கும் பாதுகாப்பான கார் மாடல்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17-க்கு 16.42 புள்ளிகளை பெற்று அசத்தியது. மேலும் இந்த கார் குழந்தைகள் பாதுகாப்பிற்கு 37.44 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இந்த காரும் ஒட்டுமொத்த மதிப்பீடுகளில் 5 நட்சத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது.

Top 5 Safest Cars In India June 2022

டாடா அல்ட்ரோஸ்:

இந்திய சந்தையில் கிடைக்கும் பாதுகாப்பான ஹேச்பேக் கார் என்ற பெருமையை டாடா அல்ட்ரோஸ் பெற்று இருக்கிறது. இந்த கார் பாதுகாப்புக்கு 5 நடசத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. இதற்காக டாடா அல்ட்ரோஸ் மாடல் பெரியவர்கள் பாதுகாப்புக்கு 16.13 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பிற்கு 29 புள்ளிகளையஉம் பெற்று இருக்கிறது.

டாடா நெக்சான்:

இந்திய சந்தையில் பாதுகாப்புக்கு 5 நடசத்திர குறியீடுகளை பெற்ற முதல் கார் என்ற பெருமையை டாடா நெக்சான் பெற்றது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் புதிய விதிகள் காரணமாக இந்த மாடல் இந்திய சந்தையின் பாதுகாப்பான கார் மாடல் என்ற பெருமையை இழந்து  இருக்கிறது. 

மஹிந்திரா XUV700:

இந்திய சந்தையில் கிடைக்கும் 7 சீட்டர் மாடல்களில் பாதுகாப்புக்கு 5 நட்சத்திர குறியீடுகளை பெற்ற ஒரே கார் என்ற பெருமையை மஹிந்திரா XUV700 வைத்து இருக்கிறது. இந்த கார் குழந்தைகள் பாதுகாப்புக்கு 41.66 புள்ளிகளையும், பெரியவர்கள் பாதுகாப்புக்கு 16.03 புள்ளிகளையும் பெற்று அசத்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios