வாட்ஸ்ஆப் அதிரடி ....! இனி பொருட்களை வாட்ஸ்ஆப் மூலமே வாங்கலாம்.....
வாட்ஸ்ஆப் அதிரடி ....! இனி பொருட்களை வாட்ஸ்ஆப் மூலமே வாங்கலாம்.....
உலக அளவில் வாட்ஸ் ஆப் பெரும்பான்மையானோர் பயன்படுத்துகின்றனர் . காரணம் மிக சுலபமான முறையில் கையாலப்வதற்கு ஏற்றவாறு அனைத்து வசதியையும் அதி தரப்ட்டுள்ளதே காரணம் . அதுமட்டுமின்றி , ஒவ்வொரு நாளும் வாட்ஸ் ஆப்பில் எந்தெந்த மாற்றம் கொண்டு வரமுடியும் என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது , வாட்ஸ் ஆப் கால் முதற்கொண்டு , ஸ்டேட்டஸ் வரை வீடியோ பதிவை கூட வைத்துக் கொள்ளும் அளவிற்கு வாட்ஸ் ஆப் வந்துவிட்டது .
வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப, வாட்ஸ் ஆப் பல சிறப்பு வசதியை தொடர்ந்து அளித்து வருகிறது . இந்நிலையில் மிலன் நகரைச் சேர்ந்த பிரபல ஆடம்பர பொருட்களை விற்கும் நிறுவனமான யூக்ஸ் நெட் நிறுவனம் விரைவில் வாட்ஸ் ஆப் மூலமாக தங்கள் நிறுவன பொருட்களை விற்கும் வசதியை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது
எப்படி சாத்தியம்...? எப்பொழுது செயல்பாட்டிற்கு வரப்போகிறது ?
யூக்ஸ் நெட் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை அளிக்க உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அடுத்ததாக வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் இணை நிறுவனரான பிரையன் ஆக்டன், வாட்ஸ் ஆப் பார் பிசினஸ் என்ற புதிய வசதியை இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு , செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .