அட்டகாசமான ஸ்டைலுடன் லேப்டாப்களை அறிமுகப்படுத்திய நோக்கியா
கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் வொர்க் பிரம் ஹோம் எனப்படும் வீட்டில் இருந்தே பணியாற்றும் கலாசாரம் உலகம் முழுதும் பிரபலமடைந்துள்ளது. மேலும் கல்வி தரம் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் உயர்கல்வி, பள்ளி கல்விகளுக்கும் கூட தற்போது லேப்டாப் தேவைகள் அதிகரித்து வருகிறது. வொர்க் பிரம் ஹோம், ஆபிஸ் வொர்க் உள்ளிட்ட தேவைகளுக்கும் லேப்டாப் அதிகம் தேவைப்படுகிறது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் 2022 ஐஎப்ஏ நிகழ்வில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா பியூர்புக் சீரிஸ் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.
கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் வொர்க் பிரம் ஹோம் எனப்படும் வீட்டில் இருந்தே பணியாற்றும் கலாசாரம் உலகம் முழுதும் பிரபலமடைந்துள்ளது. மேலும் கல்வி தரம் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் உயர்கல்வி, பள்ளி கல்விகளுக்கும் கூட தற்போது லேப்டாப் தேவைகள் அதிகரித்து வருகிறது. வொர்க் பிரம் ஹோம், ஆபிஸ் வொர்க் உள்ளிட்ட தேவைகளுக்கும் லேப்டாப் அதிகம் தேவைப்படுவதால் உலகம் முழவதும் இதன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க;- Flipkart Hotels: இனி பிளிப்கார்ட் மூலமாகவே ஹோட்டல் புக் செய்யலாம்!!
இதனை பயன்படுத்திக் கொண்டுள்ள நோக்கிய ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும் 2022 ஐஎப்ஏ நிகழ்வில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா பியூர்புக் சீரிஸ் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நோக்கியா பியூர்புக் போல்டு (PureBook Fold), பியூர்புக் லைட் (PureBook Lite), பியூர்புக் ப்ரோ (PureBook Pro) என மூன்று விதமான மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா பியூர்புக் போல்டு மற்றும் நோக்கியா பியூர்புக் லைட் மாடல்களில் 14 இன்ச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பியூர்புக் ப்ரோ மாடலில் 15.6 இன்ச் டிஜ்பிளே வழங்கப்பட்டு இருக்கிறது. போல்டு மற்றும் லைட் மாடல்களில் இண்டெல் பெண்டியம் சில்வர் எண் 6000 (N6000) பியூர்புக் ப்ரோ மாடலில் இண்டெல் கோர் i3 1220P பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. அதாவது எம்டி நிறுவனத்தின் ரைசன் 5000 பிராசசரை விட இண்டெல் கோர் i3 சக்திவாய்ந்த பிராசசராகும்.
மூன்று லேப்டாப் மாடல்களிலும் FHD IPS ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட், 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பியூர்புக் போல்டு மாடலில் டச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடல்களில் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மெமரியை பொறுத்தவரை, போல்டு மற்றும் லைட் மாடல்களில் 128 ஜிபி எஸ்எஸ்டி, பியூர்புக் ப்ரோ மாடலில் 512 ஜிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா பியுர்புக் சீரிஸ் விண்டோஸ் 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இதன் ப்ரோ மாடலில் நான்கு ஸ்பீக்கர் சிஸ்டம், சிறிய மாடல்களில் 2 ஸ்பீக்கர் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சீரிஸ்களில் எடை சற்று மாறுபடுகிறது. பியுர்புக் லைட் 1.47 கிலோ எடையும், பியுர்புக் போல்டு 2.5 கிலோ எடையும், பியுர்புக் ப்ரோ 2.0 கிலோ எடையும் உடையது. இதன் ப்ரோ மாடலில் 2MP கேமரா, அலுமினியம் டாப் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், சிறிய மாடல்களில் 1MP கேமரா மற்றும் பிளாஸ்டிக் பிரேம் வழங்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க;- TikTok hacked: 200 கோடி யூசர்களின் டேட்டா திருட்டு - பயனர்கள் அதிர்ச்சி
இதன் பேட்டரி பேக்கப் பற்றி பார்த்தால், 15.6 இன்ச் மாடலில் பேக்லிட் கீபோர்டு, 57Wh பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் இடம்பெற்றுள்ளது. லைட் மற்றும் போல்டு மாடல்களில் 38Wh பேட்டரி மற்றும் 44 வாட் பவர் அடாப்டர் வழங்கப்பட்டுள்ளது. 14 இன்ச் மாடல்களை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் எட்டு மணி நேரம் வரை பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.